அசீமுக்கு கிடைக்கும் பாராட்டை பார்த்து பொறாமையில் பொங்கும் பிக்பாஸ் போட்டியாளர்கள்.! ப்ரோமோவால் கடுப்பான ரசிகர்கள்..

BIGG-BOSS-6
BIGG-BOSS-6

தற்போது விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 6வது நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்பொழுது 35 நாட்களை கடந்து மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி உள்ளது. இந்நிலையில் தற்பொழுது இந்நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது ப்ரோமோவில் மைனா மற்றும் ஆயிஷா இருவரும் அசீமின் மாற்றத்தை நினைத்து கிண்டல் அடித்து சிரித்து பேசி வருகின்றனர் இதனால் ரசிகர்கள் கடுப்பாகி உள்ளார்கள்.

பிக்பாஸ் நிகழ்ச்சி 21 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிலையில் தற்போது வரையிலும் சாந்தி மாஸ்டர், அசல் கோளாறு, ஷெரினா மற்றும் மகேஸ்வரி, ஜிபி முத்து ஆகிய ஐந்து பேர் வெளியாகி தற்பொழுது 16 போட்டியாளர்களுடன் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. வாரம் வாரம் ஹவுஸ் மேட்ஸ்கள் தேர்ந்தெடுக்கும் நாமினேஷன் பட்டியலை வைத்து மக்கள் வாக்குகள் அளித்து வருகிறார்கள்.

மேலும் குறைவான வாக்குகளை பெறும் வகையில் போட்டியாளர்கள் ஞாயிற்றுக்கிழமை அன்று வெளியேறுவது வழக்கம். இப்படிப்பட்ட நிலையில் இந்நிகழ்ச்சியில் குறைந்த அளவு வாக்குகளை பெற்ற மகேஸ்வரி இந்த வாரம் வெளியேறியுள்ளார். இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய இரண்டாவது ப்ரோமோவில் அசீம் சாப்பிட்டுக் கொண்டு இருக்க மைனாவும், ஆயிஷாவும் கிண்டல் அடித்து பேசியுள்ளார்கள்.

அப்பொழுது ஆயிஷா அசீம் திடீர் திடீரென மாறிவிடுகிறார் அவர் மாறுவதை பார்க்கும் பொழுது நமக்கே சிரிப்பாக இருக்கிறது என்கின்றார். மேலும் அப்போது மைனா டக்குனு எல்லாரையும் திருத்த முடியாது திருந்துவதுபோல நடிக்கிறார் சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமை வந்துவிட்டால் அப்படியே மாறிவிடுகிறார்.

இவர் இப்படி இருப்பது நமக்கு நல்லது தான் எதுவாக இருந்தாலும் அவர் பெயரை சொல்லிவிட்டு போய்விடலாம் என்று ஆயிஷா மற்றும் மைனா சிரித்துக்கொண்டே அசீமை வைத்து பேசி உள்ளார்கள். இவ்வாறு தொடர்ந்து இவர்களை இவ்வாறு அசிமை பற்றி தரை குறைவாக பேசி வரும் நிலையில் ரசிகர்கள் கடுப்பாகி இருக்கிறார்கள் மேலும் மைனா இந்த வாரம் என்ன நடக்கிறது என்பதை பார்க்கலாம் என கூறுகிறார்.