விஜய் டிவியில் மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ் வாரம் தோறும் ஏதாவது ஒரு டாஸ்கை வைத்து தங்களுடைய டிஆர்பியை ஏற்ற வேண்டும் என்பதற்காக போட்டியாளர்களுக்கிடையே கடும் சண்டையை ஏற்படுத்தி வருகிறார்கள் இதனால் தற்பொழுது பிக்பாஸ் வீடு குழாயடி சண்டையையே தோற்கடிக்கும் அளவிற்கு மாறி உள்ளது.
அந்த வகையில் முக்கியமாக தன்னுடைய பேச்சுத் திறமையினால் அனைவரிடமும் சண்டை போட்டு வருபவர் தான் தனலட்சுமி இவருடன் யார் சண்டை போட்டாலும் எழுத்து பேச முடியவில்லை தன்னுடைய குரலை உசத்தி பேசி வருவதால் இவருக்கு அடிக்கடி அசீம் உடன் சண்டை ஏற்படுவது வழக்கம் மேலும் அதே சமயம் அசீமை தரக்குறைவாக பேசி வந்த நிலையில் கமலஹாசன் அவர்கள் தனலட்சுமி சென்ற வாரம் கண்டித்தார்.
இப்படி அசீமை தொடர்ந்து இந்த வாரம் தனலட்சுமி இடம் மணிகண்டன் மாட்டிக் கொண்டுள்ளார் அதாவது தற்பொழுது பிக் பாஸ் வீடு இரண்டு போட்டியாளர்களாக மாறி இருக்கிறது இனிப்பு தொழிற்சாலையாக மாறி உள்ள நிலையில் ஒரு குழாயிலிருந்து ஸ்வீட்ஸ் வரும் அதை எந்த குழுவினர்கள் எடுக்கிறார்களோ அது அவர்களுக்கே சொந்தம்.
இந்த டாஸ்கின் அனைத்து போட்டியாளர்களும் மாறி மாறி விளையாடி வரும் நிலையில் தள்ளுமுள்ளு ஏற்படுகிறது. இதனால் சண்டையும் ஏற்பட்டு வரும் நிலையில் ஒரு கட்டத்தில் தனலட்சுமி மற்றும் மணிகண்டன் இவர்களுக்கு இடையே பயங்கர சண்டை ஏற்படுகிறது. அதாவது பிக்பாஸ் அனுப்பிய ஸ்வீட் பாக்ஸ் தனலட்சுமி கையில் இருந்த நிலையில் அதனை வலுக்கட்டாயமாக மணிகண்டன் பிடுங்குகிறார்.
இதனால் தனலட்சுமி கீழே விழுந்து விடுகிறார் ஆனால் இதற்கு முன்பே கமல் சொன்னது போல போட்டி என்று வந்துவிட்டால் தள்ளுமுள்ளு இருக்கத்தான் செய்யும் ஆனால் இதனைப் பற்றி யோசிக்காத தனலட்சுமி என்னை மணிகண்டன் தள்ளிவிட்டார் என கூறிவிட்டு வாடா போடா என சொல்லி திட்டுகிறார் உடனே கோபமடைந்த மணிகண்டன் என்ன டா போட்டு பேசுற என அவரும் சண்டை போட இருவருக்கும் இடையே மிகப் பெரிய சண்டை வெடிக்கிறது.
தனலட்சுமி சைக்கோ போல் கத்தி வரும் நிலையில் அனைத்து போட்டியாளர்களும் சமாதானப்படுத்த முயற்சிக்கிறார்கள் பிறகு கமலஹாசன் அவர்கள் குறும்படம் போடுவார்கள் அதில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என தனலட்சுமி கூறுகிறார். இவ்வாறு தனலட்சுமி வாரம் வாரம் யாராவது ஒருவரை வைத்து சண்டை போடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.