விக்ரமனியிடம் மல்லு கட்டும் அமுதவாணன்.! வைரலாகும் ப்ரோமோ..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. 21 போட்டியாளர்களுடன் தொடங்கியது நிகழ்ச்சியில் தற்போது 17 போட்டியாளர்கள் மட்டுமே இருந்து வரும் நிலையில் தொடர்ந்து ஏராளமான சர்ச்சை கூறிய சண்டை நடைபெற்று வருகிறது.

அதாவது இந்நிகழ்ச்சியில் விக்ரமனுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது இவர் மிகவும் நேர்மையாக நடந்து கொள்வதாகவும் இவருடைய பேச்சு பலரையும் கவர்ந்திருப்பதாகவும் சோசியல் மீடியாவின் மூலம் ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் இந்த வாரம் ஏழு பேர் நாமினேஷன் செய்யப்பட்டிருக்கும் நிலையில் அதில் அதிகப்படியாக விக்ரமனுக்கு ஓட்டு கிடைத்திருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் விக்ரமனையிடம் இன்று போட்டியாளர்கள் பலரும் மிகவும் ஜாலியாக சண்டை போட்டு வருகிறார்கள் அதாவது விக்ரமனை கோபப்படுத்தும் வகையில் பிராங் செய்து வந்த நிலையில் இதனைத் தொடர்ந்து அமுதவாணன் மற்றும் விக்ரமனுக்கு இடையே கடும் சண்டை நிலவி இருக்கிறது.

அதாவது உனக்கு அந்த வேலை பார்ப்பது தான் என் வேலையாய் என்று விக்ரமணியிடம் அமுதவாணன் மோதி இருக்கிறார். விக்ரமனியிடம் அமுதவாணன் சண்டை போடும் ப்ரோமோ வீடியோ தற்பொழுது வெளியாகி உள்ள நிலையில் இவர்களுக்கிடையே கடுமையான வாக்குவாதம் எழுகிறது. அதாவது நேற்று ராபர்ட் மாஸ்டர், அமுதவாணன், மைனா நந்தினி இவர்களிடையே தலைவருக்கான போட்டி நடைபெற்ற நிலையில் அதில் மைனா வெற்றி பெற்றுவிட்டார்.

அதிலிருந்து அமுதவாணன் இந்த போட்டியில் தோற்றுவித்தோமே என்ற கவலையிலும் ஆத்திரத்திலும் இருந்து வரும் நிலையில் இன்று வெளியாகும் அனைத்து ப்ரோமோவும் சண்டைகளுடன் தான் வெளியாகி உள்ளது அதாவது முதல் ப்ரோமோ வீடியோவில் ஆயிஷா கோபப்படுகிறார் இதனை தொடர்ந்து இரண்டாவது வீடியோவில் அமுதவாணன் மற்றும் விக்ரமன் இவர்களுக்கு இடையே சண்டை நிலவி இருக்கிறது.