அசீமோட திட்டத்தில் நீங்கள் பங்கெடுத்து கொண்டீர்கள் என ஆயிஷாவை வச்சி செஞ்ச கமல்.! வைரலாகும் ப்ரோமோ..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் ஆறாவது நிகழ்ச்சியை தொடர்ந்து ஏராளமான டாஸ்கர்களுடன் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது மேலும் முந்தைய சீசன்களை விட இந்த சீசனில் தொடர்ந்து ஏராளமான பிரச்சனைகள் நிகழ்ந்து வரும் நிலையில் நடிகர் கமலஹாசன் அவர்கள் ஒருவரையும் விடாமல் அனைவரிடமும் கேள்வி கேட்டு வச்சி செய்து வருகிறார்.

இப்படிப்பட்ட நிலையில் நேற்று டாஸ்கின் பொழுது ஷெரினாவை கீழே தள்ளி விட்டது தனலட்சுமி தான் என பலரும் கூறி வந்த நிலையில் குறும்படம் போட்டு அந்த குழப்பத்தை அனைவருக்கும் தெரியப்படுத்தினார். மேலும் அசீம் செய்த தவறுகளையும் சுட்டிக்காட்டினார். அந்த வகையில் ஷெரினா ஓவர் ஆக்டிங் செய்திருப்பது பலருக்கும் தெரிய வருகிறது.

இந்நிலையில் இவரை தொடர்ந்து இன்று ஆயிஷாவை குறி வைத்து இருக்கிறார் கமல் அதாவது நீயும் பொம்மை.. நானும் பொம்மை டாஸ்க் ஆயிஷா வேண்டுமென்றே ரட்சிதாவின் பொம்மையை வெளியேற்றிவிட்டு தனக்கு எதுவும் தெரியாதது போல் நடித்து வந்தார் மேலும் அதனை கண்டினியூ செய்து வந்த நிலையில் தற்பொழுது உண்மையை கமல் அவர்கள் வெளிச்சம் போட்டு காமித்து இருக்கிறார்கள்.

அது ரக்ஷிதாவின் பொம்மை என்பதே எனக்கு தெரியாது என ஆயிஷா கூறுகிறார் அதற்கு ரக்ஷிதா விளையாட வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த என்னை வெளியேற்றி விட்டார்கள் என்பது வருத்தமாக இருப்பதாக கூறிய நிலையில் பிறகு ஆயிஷா அசீம் சொன்னதால்தான் அப்படி செய்ததாக கூறுகிறார்.

அதற்கு கமல் அவர்கள் அசீம் திட்டத்தில் நீங்கள் பங்கெடுத்து கொண்டீர்கள் என கூற ஆயிஷாவின் முகம் மாறுகிறது இவ்வாறு நேற்று ஷெரினாவை தொடர்ந்து இன்று ஆயிஷாவை கமல் வறுத்தெடுத்து உள்ளார் இந்த ப்ரோமோ தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.