அமுதவாணன் சிறைக்குச் சென்ற கதையை கேட்டு வயிறு குலுங்க சிரித்த கமல்.!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று ஒளிபரப்பாக இருக்கும் எபிசோடில் அமுதவாணன் சொன்ன கதையைக் கேட்டு கமல் அவர்கள் சிரித்துள்ளது குறித்து ப்ரோமோ தற்பொழுது வெளியாகியிருக்கிறது. விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 6வது நிகழ்ச்சி கடந்த 25 வருடங்களாக வெற்றி கரமாக மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் கடந்த மாதம் 21 போட்டியாளர்களுடன் அறிமுகமான இந்நிகழ்ச்சியில் தற்பொழுது 3 போட்டியாளர்கள் வெளியேறியுள்ளார்கள்.

அதில் சாந்தி மற்றும் அசல் கோளாறு ஆகியோர்கள் மக்களிடம் குறைவான வாக்குகள் பெற்று எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து ஜிபி முத்து மகனின் உடல்நிலை காரணமாக பாதியிலேயே வெளியேறினார் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இந்த வாரம் முழுவதும் பிக்பாஸ் நிகழ்ச்சியை விறுவிறுப்பாமல் இல்லாமல் பெரிதும் சண்டை உடன் நடைபெற்று வந்தது.

எனவே இந்த வாரத்தின் இறுதியில் கமல் போட்டியாளர்களுடன் கலந்துரையாடி உள்ளார் அது குறித்த புரோமோ தான் தற்போது வெளியாகியிருக்கிறது. அதாவது அமுதவாணன் தான் சிறைக்குச் சென்ற கதையை கூறியுள்ளார் அதன்படி கடந்த வாரம் டாஸ்கின் அடிப்படையில் கதிரவன் சிறைக்கு சென்றிருந்தார். அதற்காக அமுதமான பிக்பாஸ்யிடம் கதிரவனக்கு பதில் நான் சிறைக்குச் செல்கிறேன் என சொல்லி உள்ளார்.

வழக்கமாக பிக்பாஸ்யிடம் எந்த கோரிக்கை வைத்தாலும் அவர் இதுவரையிலும் பதில் அளிக்க மாட்டார் என நினைத்து மிகவும் தெனாவட்டாக கேட்டுள்ளார். ஆனால் உடனடியாக உங்கள் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது நீங்கள் சிறைக்குச் செல்லலாம் என சொல்லி அமுதவாணனுக்கு பல்பு கொடுத்துள்ளார் பிக்பாஸ்.

அவர் சொன்ன இந்த கதையை கேட்டு கமல் அவர்கள் குலுங்கி குலுங்கி சிரித்த காட்சிகளின் ப்ரோமோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.மேலும் இந்த வாரம் செரினா பிக்பாஸ் வீட்டை விட்டு மக்கள் மத்தியில் குறைந்த அளவு வாக்குகளை பற்றிய வெளியேறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.