தனலட்சுமி செய்த திருட்டுத்தனத்தை குறும்படம் போட்டு காண்பித்த ஆண்டவர்.! அசிங்கம் தாங்க முடியாமல் கண் கலங்கிய போட்டியாளர்..

விஜய் டிவியில் தற்போது பிக்பாஸ் சீசன் 6வது நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வரும் நிலையில் தொடர்ந்து அனைத்து போட்டியாளர்களும் தங்களுடைய சிறந்த விளையாட்டுத் திறமையை வெளிப்படுத்தி வருகிறார்கள். மேலும் அடிக்கடி சண்டை சச்சரவு ஏற்படுவது வழக்கமாக இருந்து வருகிறது அந்த வகையில் 21 போட்டியாளர்களில் ஒருவராக பிக்பாஸ் வீட்டிற்கு அறிமுகம் ஆனவர் தான் தனலட்சுமி.

தற்பொழுது கமலஹாசன் அவர்கள் அனைவர் முன்நிலையிலும் தனலட்சுமிக்கு சரியான பதிலடி கொடுத்திருக்கிறார். அதாவது இந்த வாரம் முழுவதும் சண்டையும், ரகளையும் என பிக்பாஸ் வீடு இருந்து வந்தது. அதற்கு தனலட்சுமி தான் முக்கிய காரணம் இந்த வாரம் ஸ்வீட்ஸ் பேக்கரி டாஸ்கில் அதிக பணம் வைத்திருந்ததால் தனலட்சுமி அந்த போட்டியில் வெற்றி பெற்றார். மேலும் அதோடு மட்டுமல்லாமல் அடுத்த வாரம் நாமினேஷனில் இருந்து தனலட்சுமி காப்பாற்றப்பட்டு உள்ளார்.

மேலும் இவருக்கு எதிரணியான விக்ரமன் தோற்றதாக அறிவிக்கப்பட்டு இருந்தது இந்நிலையில் கமலஹாசன் அவர்கள் ஒரு குறும்படம் போட்டு காட்டிவுள்ளார். அதில் தனலட்சுமி திருட்டுத்தனமாக தான் அந்த பணத்தை சம்பாதித்தார் என்பது ஹவுஸ்மேட்ஸ் அனைவருக்கும் தெரிய வந்துள்ளது. எனவே தனலட்சுமி உள்ளிட்ட அனைவரும் சிரித்தனர்.

ஆனால் கமலஹாசன் உங்களைப்போல் நானும் சிரித்துக் கொண்டு போனால் இது மிகப் பெரிய தவறாக மாறிவிடும் நியாயமாகவும், உண்மையாகவும் விளையாண்ட விக்ரமன் தான் இந்த போட்டியில் சரியான வெற்றியாளர் என தனலட்சுமியிடம் இருந்து வெற்றியை பறித்து விக்ரமனுக்கு அளித்துள்ளார். மேலும் அந்த நேரத்தில் விக்ரமன் நாமினேஷனில் இருந்து காப்பாற்றப்பட்டு விட்டார் எனவும் கமல் அவர்கள் அறிவித்துள்ளார்.

இதனால் தனலட்சுமி கண்கலங்க பிறகு தனலட்சுமி ஆறுதல் கூறுவதும் நான் தான் என அறிவுரை கூறுகிறார். அதாவது தனலட்சுமி எப்பொழுதும் நான் செய்வது தான் சரி என்பது போல இருந்து வருகிறார். விளையாட்டாக இருந்தாலும் அதில் ஒரு நேர்மை, நியாயம் இருக்க வேண்டும் உங்களுக்கு மட்டும் இன்றி மக்களுக்கும் இதன் மூலம் கமல் தெரிவித்துள்ளார். இவ்வாறு இப்படியே தனலட்சுமி செய்தால் கண்டிப்பாக இவர் தான் அடுத்த வாரம் வெளியேறுவார் என கூறப்படுகிறது.