விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது மேலும் இந்நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பும் கிடைத்து வருகிறது. இந்நிலையில் தற்போது நிகழ்ச்சி தொடங்கி 85 நாட்கள் முடிந்துள்ள நிலையில் இன்னும் 15 நாட்கள் மட்டுமே இருக்கிறது.
எனவே போட்டியாளர்கள் மிகவும் விறுவிறுப்பாக விளையாடி வருகிறார் இதற்கு மேல் தான் இவர்கள் தங்களுடைய சிறந்த விளையாட்டு திறமையை வெளிப்படுத்துவதற்கான நேரம் வந்துள்ளது. 21 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் தற்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே பங்குபெற்று வாழ்கிறார்கள்.
மேலும் இவர்களில் விக்ரமன் மற்றும் ஷிவில் ஆகிய இருவரில் ஒருவருக்கு டைட்டில் பட்டம் வெல்ல நிறைய வாய்ப்பு இருக்கிறது. மேலும் ஒவ்வொரு சீசனிலும் ஒரு போட்டியாளர் நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் மேலும் அதற்கான டாஸ்க்களும் மிகவும் கடுமையாக இருந்து வரும் நிலையில் அந்த டாஸ்க்களில் வெற்றி பெறுபவர்கள் நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதியானவர்களாக தேர்வு செய்யப்பட்டு வருகிறது.
எனவே பிக்பாஸ் சீசன் 6க்கான் டிக்கெட் டூ ஃபினாலே நேற்றிலிருந்து நடைபெற்ற வருகிறது. இதன் காரணமாக சோதனைகள் பலவற்றையும் தாங்கிக்கொண்டு அனைத்தையும் கடந்து முதல் போட்டியாளராக யார் அந்த நபர் என தீர்மானிக்கப்பட இருக்கிறது மேலும் இந்த வார இறுதியில் எந்த நபர் அதிக புள்ளிகள் எடுக்கிறாரோ அவருக்கு டிக்கெட் டூ ஃபினாலே வழங்கப்பட்டு நேரடியாக இறுதிப்போட்டிக்கு அனுப்பப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே அனைத்து போட்டியாளர்களும் மிகுந்த எதிர்பார்ப்புடன் விளையாடி வருகிறார்கள் அதில் தற்பொழுது வெளியாகி இருக்கும் முதல் ப்ரோமோவில் நேரடியாக இறுதிக்கு செல்லும் அந்த போட்டியாளர் யார் என்பது இன்னும் ஓரிரு நாட்களில் தெரியும் என்பதற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
#Day86 #Promo1 of #BiggBossTamil #BiggBossTamil6 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason6 #BiggBoss #பிக்பாஸ் #VijayTelevision @preethiIndia @NipponIndia pic.twitter.com/GteMUwJkrY
— Vijay Television (@vijaytelevision) January 3, 2023