விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்ந்து மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது வெளியாகி உள்ள ப்ரோமோவில் விக்ரமன் ஜனனியின் தமிழ் பற்றி சொன்னது வழக்காக நடைபெற்ற உள்ளது. இது குறித்த ப்ரோமோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
அதாவது பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு தற்பொழுது 45 நாட்களை கடந்துள்ள நிலையில் இந்த வார தலைவராக மைனா நந்தினி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்த வாரம் ஓபன் நாமினேஷன் நடைபெற்றது அதில் தனலட்சுமி, அசிம், ராம், மணிகண்டா, அமுதவாணன், கதிரவன், ராபர்ட் மாஸ்டர் ஆகியோர்கள் நாமினேட் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட நிலையில் இந்த வாரம் இருவர் எலிமினேட் செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த வாரம் நீதிமன்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது அதில் பிக்பாஸ் வீட்டில் இதுவரை நடந்த சண்டைகளை வைத்து வழக்கு தொடர வேண்டும் அதில் நீதிபதி தீர்ப்பு சொல்வார். அந்த வகையில் தற்பொழுது வெளியான ப்ரோமோவில் ஜனனியின் தமிழ் புரியவில்லை என விக்ரமன் சொன்னது வழக்காக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
அதில் ஜனனி தரப்பில் அசிம் மற்றும் விக்ரமன் தரப்பில் குயின்சி வாதாடுகின்றனர். இதில் ஜனனி மொழியில் பிரச்சனை என விக்ரமன் சொன்னது வேதனையாளிப்பதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிறகு குயின்சி உடனே உங்கள் மொழியில் பிரச்சனை இருக்கிறதா என கேட்டதாக கூறுகிறார். பின் பேசிய விக்ரமன் அவங்க மொழியில் பிரச்சனை இல்லை அவங்க செந்தமிழ் பேசுவது எனக்கு தடுமாற்றமாக இருப்பதாக விக்ரமன் சொல்கிறார்.
உடனே ஜனனி உங்க தமிழ் என சொல்வது எனக்கு வருத்தம் அளிப்பதாக கூறுகிறார் பிறகு குயின்சி எத்தனை முறை கத்தி சொன்னாலும் இது டாஸ்க் மட்டும்தான் என சொல்கிறார் இதில் நீதிபதியாக இருக்கும் அணி என்ன தீர்ப்பு கொடுக்கப் போகிறாது என்பதை இன்று ஒளிபரப்பாகும் எபிசோடில் தெரிந்துக் கொள்ளலாம்.