விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து மிகவும் சுவாரசியமான எபிசோடுகளுடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்பொழுது 35 நாட்களைக் கடந்து மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் போட்டியாளர்களுக்கு இடையே சண்டை ஏற்படுவது வழக்கமாக இருந்த வருகிறது.
அந்த வகையில் தற்பொழுது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் இந்த வார எபிசோடில் சுவாரஸ்யம் குறைவாக விளையாண்ட போட்டியாளர்களான ராபர்ட் மற்றும் ரக்ஷிதா ஆகிய இருவரும் சிறைக்கு அனுப்பப்பட்டு இருக்கும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் டாஸ்க் வழங்கப்படுவது வழக்கம்.
அந்த டாஸ்க்கில் நன்றாக விளையாடுபவர் அடுத்த வாரம் நாமினேஷன் பட்டியலில் இருந்து தப்பித்து விடுவார் என்பதும் சரியாக விளையாடுபவர்கள் ஜெயிலுக்கு அனுப்பப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் அரண்மனை டாஸ்க் சரியாக விளையாடாத இரண்டு நபர்களை தேர்ந்தெடுத்து சொல்ல வேண்டும் என பிக்பாஸ் கூறுகிறார்.
அந்த வகையில் 16 போட்டியாளர்களில் அதிக பேர் ராபர்ட் மற்றும் ரட்சிதாவை தேர்ந்தெடுத்து சொல்கிறார்கள் இதனை அடுத்து ராபர்ட், ரட்சிதா இருவரும் சிறைக்கு செல்ல வேண்டும் என பிக்பாஸ் உத்தரவிட இருவரும் சிறைக்குள் அடைக்கப்படும் காட்சிகளின் வீடியோ தான் தற்பொழுது வெளியாகி உள்ளது.
அதாவது அரண்மனை டாஸ்க்கில் கூடவே இருந்து ரட்சிதா ஏமாற்றி விட்டதாக ராபர்ட் கதறி அழுதார். மேலும் மன வருத்தத்தில் இருந்து வந்த நிலையில் ரட்சிதா மன்னித்து விடுங்கள் எனக் கூறிய பிறகும் அவர் சரியாகவில்லை. இதனைத் தொடர்ந்து இருவரும் ஒன்றாக ஜெயிலில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில் இதில் இவர்களுடைய சண்டை தீருமா மீண்டும் பழைய நிலைமைக்கு வருவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
#DAY40 of #BiggBossUNSEEN இரவு 11 மணிக்கு / மறு ஒளிபரப்பு காலை 11:30 மணிக்கு நம்ம #VijayTakkar-ல்📺#BBTamilSeason6 #BiggBossTamil6 #பிக்பாஸ் pic.twitter.com/LIgxEJXmQM
— Vijay Takkar (@vijaytakkaroffl) November 18, 2022