விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவது வழக்கமாக இருந்து வருகிறது எனவே விஜய் டிவியும் வருடம் வருடம் ஏதாவது ஒரு புதிய நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு தமிழ் சின்னத்திரைக்கு அறிமுகமான நிகழ்ச்சி தான் பிக்பாஸ்.
இந்நிகழ்ச்சியின் ஐந்து சீசன்கள் வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில் தற்போது ஆறாவது சீசன் மிகவும் சுவாரஸ்யமாக ஒளிபரப்பாகி வருகிறது மேலும் இந்த முறை கண்டன்டுக்கு பஞ்சமில்லாமல் இருந்து வருகிறது அதற்கு முக்கிய காரணம் முந்தைய சீசன்களை விட இந்த சீசனில் 21 போட்டியாளர்களுடன் இந்நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.
அந்த வகையில் இந்த நிகழ்ச்சியின் முதல் எலிமினேஷனாக சாந்தி வெளியேறினார் இவரைத் தொடர்ந்து ஜி.பி முத்து தானாக வெளியேறிய நிலையில் இந்த வாரம் அசல் கோளாறு வெளியேறினார். அந்த வகையில் தற்பொழுது 18 போட்டியாளர்களுடன் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் அடுத்ததாக இந்த வாரம் நாமினேஷன் பிராசஸில் விக்ரமன், அசீம், ஆயிஷா, கதிர், ஷெரினா உள்ளிட்ட ஐந்து பெயர்கள் இடம்பெற்று இருக்கிறார்கள்.
மற்ற போட்டியாளர்கள் இந்த லிஸ்டில் சிக்காத நிலையில் பலரும் மகிழ்ச்சியிலிருந்து வருகிறார்கள். இந்நிலையில் நேற்று மிகவும் மகிழ்ச்சியாக அனைவரும் விளையாடி வந்த நிலையில் தற்போது விதவிதமான டாஸ்க்கள் நடைபெற்று வருகிறது. அதில் விவாத நிகழ்ச்சி, ராசிபலன், குக்கிங் ஷோ உள்ளிட்ட போட்டிகள் நடைபெறுகிறது.
அதில் விவாத நிகழ்ச்சிகள் விக்ரமன், அசீம், ஷெரினா, தனலட்சுமி உள்ளிட்ட நால்வரும் இடம்பெறுகின்றனர் தற்பொழுது வெளியாகி உள்ள ப்ரோமோவில் அசீம் தனலட்சுமியை குறை கூற மறுபுறம் அசீமிற்கு புகழாரம் சூட்டுகிறார் ஷெரினா தொடர்ந்து தனலட்சுமி விக்ரமும் அசிமுடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் ப்ரோமோ தான் தற்பொழுது வெளியாகி இருக்கிறது.