விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது இதன் காரணமாக தொடர்ந்து விஜய் டிவியும் ஏராளமான ரியாலிடி ஷோக்களையும் அறிமுகப்படுத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் உலகம் முழுவதும் மிகவும் ஃபேமஸாக இருந்து வரும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ்.
ஐந்து சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் தற்போது ஆறாவது சீசன் அறிமுகமாகியுள்ளது அறிமுகமாகி வரும் வாரம் மட்டுமே ஆகும் நிலையில் அதற்குள் அனைவரும் சண்டை போட்டுக் கொள்கிறார்கள். மேலும் இந்த சீசனில் முந்தைய சீசன்களை விட விஜய்க்குரிய கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள் அந்த வகையில் முக்கியமாக யூடியூப் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த ஜிபி முத்துவிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது.
வீட்டிற்குள் சென்ற முதல் நாளே ஆதாமா என கேட்டு கமலுக்கு கொடுத்த ஷாக் பலரையும் கவர்ந்தது. இந்நிலையில் தனலட்சுமி மற்றும் ஜி பி முத்து இவர்களுக்கிடையே பிரச்சனை வந்த நிலையில் ஜிபி முத்து கண் கலங்கியது பலரையும் வருத்தத்தில் ஆழ்த்தியது இவ்வாறு தொடர்ந்து ஜி பி முத்துவிற்கு ரசிகர்கள் தங்களுடைய ஆதரவை கொடுத்து வருகிறார்கள்.
இப்படிப்பட்ட நிலையில் நேற்று நடந்த சனிக்கிழமை கமல் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்களிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அப்பொழுது ஆதாமா எங்க இருக்காரு என ஆதாமை பற்றி கேட்டால் ஜி பி முத்து பாதாமை காட்டுகிறார். ஆதாமை தெரியல உங்களுக்கு அவர் எவ்வளவு வருத்தப்படுவது தெரியுமா என கமல் இன்று கேட்க ஆதாமா எங்க இருக்காரு என ஜிபி முத்து பதில் கொடுக்கிறார்.
அந்த பதிலை கேட்டவுடன் அதிர்ச்சி அடைகிறார் கமல் அந்த ப்ரோமோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும் கமல் 40 நாட்களில் நடக்கக்கூடிய சண்டை எல்லாம் இப்பொழுது நடக்க ஆரம்பித்து விட்டது என கூறினார் மேலும் அதேபோல் ஒட்டு மொத்த போட்டியாளர்களையும் வாயடைக்கும் அளவிற்கு கேள்விகளை கேட்டு வருகிறார்.