சும்மாவே ரகளை தான்.. பிக்பாஸ் சீசன் 6-ல் சர்ச்சை போட்டியாளர்களை களமிறக்க உள்ள விஜய் டிவி.!

பொதுவாக விஜய் டிவியில் ரியாலிட்டி ஷோ வழங்குவதில் எப்பொழுதுமே முன்னணி தான் மற்ற தொலைக்காட்சிகளை விட மிகவும் சுவாரசியமாகவும் ரசிகர்களை கவரும் வகையிலும் ரியாலிட்டி ஷோக்களை வழங்குவதில் நம்பர் ஒன்றாக விஜய் டிவி விளங்கி வருகிறது. அந்த வகையில் கடந்த ஐந்து வருடங்களாக மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ்.

இந்த சீசன்கள் வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில் தற்போது ஆறாவது சீசன் ஒளிபரப்பாக இருக்கிறது பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைப்பது வழக்கமாக இருந்து வருகிறது மேலும் இதன் மூலம் பிரபலமடைந்து விட்டால் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பையும் தொடர்ந்து பெற்று விட்டார்கள் ஒரு பக்கம் எப்படி இருந்தாலும் மற்றொரு பக்கம் ரசிகர்களை பிடிக்காத வகையில் நடந்து கொண்டால் அவர்களை வச்சு செய்யவும் தயங்க மாட்டார்கள்.

பிக்பாஸ் ஐந்து சீசன்கள் முடிந்துள்ள நிலையில் ரசிகர்களின் கோரிக்கையின் படி 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் வகையில் கடந்த ஐந்து சீசன்களிலும் கலந்து கொண்ட போட்டியாளர்களை வைத்து பிக்பாஸ் அல்டிமேட் என்ற பெயரில் ஓடிடி-யில் ஒலிபரப்பி வந்தார்கள். இந்நிகழ்ச்சியின் மூலம் முன்பு தனது பெயரை கெடுத்துக் கொண்ட பலரும் ரசிகர்கள் மனதை கவர்ந்தார்கள் உதாரணமாக ஜூலியை சொல்லலாம்.

இந்நிலையில் தற்பொழுது பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சிக்காக போட்டியாளர்களை தேர்ந்தெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் சர்ச்சைக்குரிய பிரபலங்களை இந்த முறை களமிறக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிகழ்ச்சி ஜூலை மாதம் இறுதியில் ஆகஸ்ட் மாதம் பாதியிலேயே துவங்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்பொழுது ஆகஸ்ட் 2ஆம் தேதி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் ஒளிபரப்பாக இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

நடிகர் கமலஹாசன் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்ததால் அவருக்கு பதிலாக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை நடிகர் சிம்பு தொகுத்து வழங்கி வந்த நிலையில் தற்பொழுது நடிகர் கமலஹாசனே சீசன் 6 தொகுத்து வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.