கணவர் கூறிய அந்த வார்த்தை.. நிகழ்ச்சியடைந்து ரட்சிதா போட்ட பதிவு.!

rachitha-mahalakshmi
rachitha-mahalakshmi

சமீப காலங்களாக வெள்ளித்திரை பிரபலங்களை விட சின்னத்திரை பிரபலங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அந்த வகையில் வெள்ளித்திரையில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும் சின்னத்திரையில் தொடர்ந்து பல வருடங்களாக பணியாற்றி வருபவர் தான் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரைக்கு அறிமுகமானார்.

அதன் பிறகு அடுத்தடுத்து ஏராளமான சீரியல்களில் நடித்து தற்போது தமிழ் சின்னத்திரையில் தவிர்க்க முடியாத கதாநாயகிகளில் ஒருவராக வளம் வந்து கொண்டிருக்கிறார். கடைசியாக இவர் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வந்த சீரியலில் நடித்திருந்தார் இப்படிப்பட்ட நிலையில் இவருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.

பிக்பாஸ் சீசன் 6வது நிகழ்ச்சி முடியப்போகும் நேரத்தில் மக்கள் மத்தியில் குறைவான வாக்குகளை பெற்று பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். ரச்சிதா பிக்பாஸ் வீட்டில் கலந்து கொள்ளும் பொழுது இவரைப் பற்றி ஏராளமான நெகட்டிவ் கமெண்ட்கள் வெளியானது இதற்கு அவருடைய கணவர் தினேஷ் பதில் அளித்து மிகவும் ஆதரவாக இருந்தார்.

தினேஷ் ரச்சிதா இருவரும் ஒன்றாக சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டார்கள் கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் ஒன்றாக வாழ்ந்து வந்த இவர்கள் பிறகு மனஸ்தாபம் ஏற்பட்டதால் தற்பொழுது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இன்னும் சட்டபூர்வமாக விவாகரத்து பெறவில்லை எனவே இவர்கள் விரைவில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினேஷ் எங்களுக்குள் சின்ன மனஸ்தாபம் அது சரியாவதற்காக நேரம் தேவைப்படுகிறது எனவே தான் இந்த இடைவெளி என கூறி இருந்தார். இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் தினேஷ் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு நன்றி கூறி உங்களால்தான் என்னால் ரட்சிதாவை 24 மணி நேரமும் பார்க்க முடிந்தது என்றும் உங்களை நினைத்து பெருமை கொள்கிறோம் உண்மையில் நீங்கள் பல இதயங்களை வென்று உள்ளீர்கள் என கூறி இருக்கிறார்.

இதற்கு பதில் அளித்த ரட்சிதா ஆதரவளித்த அனைவருக்கும் மிக்க நன்றி நீங்கள் இல்லாமல் இதனை என்னால் செய்திருக்க முடியாது என்றும் தெரிவித்திருக்கிறார் இவ்வாறு இவர்கள் மாறி மாறி பேசிக்கொள்ளும் நிலையில் விரைவில் இணைவார்கள் என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.