விஜய் டிவியில் தற்பொழுது பிக்பாஸ் சீசன் 6வது நிகழ்ச்சி மிகவும் சுவாரஸ்யமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தினம் தோறும் ஏதாவது போட்டியாளர்கள் சண்டை போட்டுக் கொண்டு வருகிறார்கள். மேலும் பிக்பாஸ்சும் இவர்களுக்கிடையே சண்டையை மூட்டும் வகையில் ஏராளமான டாஸ்க்களை அறிமுகப்படுத்தி வருகிறது.
இதனால் பிக்பாஸ் வீடியோ இன்று மிகவும் களவரமாக மாறி இருக்கிறது அதாவது தற்பொழுது பிக்பாஸ் வீட்டில் 17 போட்டியாளர்கள் பங்கு பெற்று வருகிறார்கள் இவர்கள் இரண்டு அணிகளாக பிரிந்து தங்களுக்கு கிடைக்கும் பொருட்கள் மூலம் இனிப்பு பலகாரம் செய்ய வேண்டும் அதில் ஒரு ட்விஸ்ட் என்னவென்றால் இரண்டு அணிகளும் ஒரு லிப்டில் பொருள்கள் வரும் அதனை முதலில் யார் எடுக்கிறார்களோ அது அந்த அணிக்கு தான் அந்த பொருள் சேரும்.
ஆகையால் இரண்டு அணிகளும் போட்டி போட்டுக் கொண்டு பொருட்களை எடுப்பதில் ஆர்வம் செலுத்தி வருகிறார்கள் இந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக தனலட்சுமி மற்றும் மணிகண்டனுக்கு இடையே சண்டை ஏற்படுகிறது. அப்பொழுது மணிகண்டன் போடி, வாடி நீ என்ன இவளாய் என கடுமையாக கூற அதேபோல் தனலட்சுமி போடா, வாடா என மணிகண்டனை தரைக்குறைவாக பேசுகிறார்.
இவ்வாறு கூறியவுடன் மணிகண்டனுக்கு கோபம் வருகிறது என்ன போடா வா உனக்கு என்ன வயசு எனக்கு என்ன வயசு என ஆத்திரமடைகிறார். இந்த நேரத்தில் எதிர் அணியில் உள்ள பொருட்களை கோபத்தில் தள்ளி விடுகிறார் மணிகண்டன். எனவே பிக்பாஸ் வீட்டில் கடும் சண்டை நிலவி இருக்கிறது.
இவ்வாறு தொடர்ந்து தனலட்சுமி தன்னுடைய சிறந்த விளையாட்டுத் தருமையை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக கடுமையாக போட்டி போட்டு வருகிறார் இதனால் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் பல போட்டியாளர்களுடன் இவருக்கு சண்டை ஏற்படுகிறது. மேலும் தனலட்சுமி கமலஹாசன் அவர்களை மீண்டும் குறும்படம் போட சொல்ல வேண்டும் என கூறி வருகிறார்.