விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் தற்போது இன்றைய நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் ஜனனி ராபர்ட் மாஸ்டரை வருத்தெடுக்கும் காட்சிகள் இடம் பெற்று இருக்கிறது. அதாவது பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 35 நாட்களை வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்நிகழ்ச்சியில் பங்கு பெற்று வரும் அனைத்து போட்டியாளருக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இப்படிப்பட்ட நிலையில் இந்நிகழ்ச்சியின் வாரம் தோறும் ஒருவர் வெளியேறுவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் கடந்த வாரம் மகேஸ்வரி குறைவான வாக்குகளை பெற்று அதன் காரணமாக பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது 16 போட்டியாளர்களுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் சுறுசுறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
அந்த வகையில் வாரம் தோறும் லக்ஜோரி பட்ஜெட் டாஸ்க்கு நடந்து வருவதும் வழக்கம் அதில் வெற்றி பெறும் போட்டியாளர்களுக்கு புள்ளிகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அதன் மூலம் போட்டியாளர்கள் தங்களுக்கு வேண்டிய பொருள்களை வாங்கிக் கொள்ளலாம்.
அந்த வகையில் இந்த வாரம் பிபி ரோஸ்ட் என்கின்ற டாஸ்க் நடைபெற்று வருகிறது அதில் போட்டியாளர்கள் ஜோடி ஜோடியாக பிரிந்து ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி கேள்வி கேட்க வேண்டும் அப்படி ராபர்ட் மாஸ்டரும் ஜனனியும் ஒரு ஜோடியாக இந்த டாஸ்கை விளையாடுகின்றனர். அப்பொழுது அனைவரும் டார்லிங் டார்லிங்னு கூப்பிடுறீங்களே நீங்க பிக்பாஸ் வீட்டுக்கு வந்து இருக்கீங்களா இல்ல பிக்னிக் வந்திருக்கிறீர்களா? என ராபர்ட் மாஸ்டரை பார்த்து ஜனனி கேட்க ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள்.
இவ்வாறு போய்க் கொண்டிருக்கும் நிலையில் வாரம் வாரம் கடுமையான சண்டைகள் போட்டியாளர்களுக்கு இடையே நடைபெற்று வருவது வழக்கம் அந்த வகையில் தனலட்சுமி தொடர்ந்து கமலஹாசன் அவர்களிடம் அறிவுரை வாங்கி வரும் நிலையில் இந்த வாரம் என்ன செய்வார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.