விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூன்று வாரங்களாக 6வது சீசன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்நிகழ்ச்சியின் முதல் போட்டியாளராக சாந்தி குறைந்த வாக்குகளை பெற்று வெளியேறினார். இவரை தொடர்ந்து ஜி.பி முத்து தானாக முன்வந்து தன்னுடைய குடும்பத்தை பார்க்க வேண்டும் என்பதற்காக வெளியேறிய நிலையில் கடந்த வாரம் அசல் கோளாறு வெளியேறியிருந்தார்.
இப்படிப்பட்ட நிலையில் இந்த வாரம் யார் வெளியேறுவார் என்ற மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. வாரம் வாராம் திங்கட்கிழமை அன்று நாமினேஷங்கள் போட்டியாளர்களின் விருப்பத்துடன் நாமினேஷன் நடைபெற்று வரும் நிலையில் இந்த வாரம் அவர்கள் கூறிய அடிப்படையில் குறைந்த வாக்குகளை பெற்று இந்நிகழ்ச்சியை விட்டு ஒருவர் வெளியேற இருக்கிறார்.
அந்த வகையில் இந்த வாரம் அசீம் கதிரவன் மற்றும் விக்ரமன், ஆயிஷா, ஷெரினா ஐந்து போட்டியாளர்களும் நாமினேஷன் செய்யப்பட்டார்கள். இப்படிப்பட்ட நிலையில் இவர்களில் யார் எவ்வளவு வாக்குகள் பெற்றிருக்கிறார்கள் என்பது குறித்த தகவல் தற்பொழுது வெளியாகிவுள்ளது. இவ்வாறு நாமினேஷன் செய்யப்பட்ட ஐந்து பேரில் மிகவும் குறைந்த அளவிலான 4 சதவீதம் மட்டுமே பெற்று ஒருவர் வெளியேற இருக்கிறார்.
அதாவது கடந்த வாரம் நடைபெற்ற நீயும் பொம்மை நானும் பொம்மை டாஸ்க் தன்னுடைய நடிப்பை உண்மை போல் அனைவர் மனதிலும் பதிய வைத்த ஷெரினா தான் குறைந்த வாக்குகளை பெற்று இந்நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வெளியேறுகிறார். இவருக்கு அடுத்ததாக அதிக ஓட்டுகளை பெற்றிருந்து தப்பிப்பவர் தான் ஆயிஷா இவர் 7 சதவீதம் வாக்குகளை பெற்றிருக்கிறார்.
இவர்களைத் தொடர்ந்து 37 சதவீத வாக்குகளை பெற்று முதலிடத்தில் விக்ரமனும், இவரனை தொடர்ந்து அனைவரும் இவர் தான் வெளியேறுவார் என எதிர்பார்த்து வந்த அசீம் 33 வாக்குகளை பெற்று இரண்டாவது இடத்திலும் இருக்கிறார். பிறகு 17 சதவீத வாக்குகளை பெற்று கதிரவன் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கும் நிலையில் எப்படியோ இவர்கள் வெளியேற வாய்ப்பு இல்லை என தெரியவந்துள்ளது.