இனிம நீ ஆனந்தி இல்ல அழுமூஞ்சி.. பிக்பாஸ் வீட்டில் மாஸ் காட்டும் முத்து

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் காயின் டாஸ் கொடுக்கப்பட்டது. அதில் சில சம்பவங்கள் நடந்தது பார்வையாளர்கள் மத்தியில் சர்ச்சையாகவும் விமர்சனமாகவும் மாறி இருக்கிறது. அதேபோல் இந்த வாரம் வீடு ஹோட்டலாக மாறும் எனவும் பிக் பாஸ் அறிவித்து இருந்தார்.

அதில் இரு அணிகளும் போட்டி போட்டு தங்கள் திறமையை காட்டினார்கள். மூன்றாவது நாளான இன்று சரியாக டாஸ்க்கை செய்யாதவர்கள் ஊழியர்களாக வேண்டும் சிறப்பாக செய்தவர்கள் கெஸ்ட் ஆக வரவேண்டும் என கூறப்பட்டது.

அதைத்தொடர்ந்து இரண்டு அணிகளாக பிரிந்தவர்கள் தங்கள் வேலையை பார்க்க தொடங்கினார்கள். ஆனால் இப்போது வந்திருக்கும் ப்ரோமோவில் ஊழியராக இருக்கும் ஆனந்தி கெஸ்ட் ஆக வந்திருக்கும் முத்துவிடம் தன் கேரக்டரை மறந்து சண்டைக்கு பாய்கிறார்.

இவரிடம் இருக்கும் ஒரு குறை என்னவென்றால் தான் சொல்வது தான் சரி என்ற மனநிலையிலேயே பேசுவார். அது தவறில்லை என்றாலும் தன் மீது நியாயம் இல்லை என்றாலும் அவர் அதையே பிடித்து தொங்குவது தான் எரிச்சல் ஊட்டுகிறது.

அதிலும் கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு முகத்தை சிரித்தது போல் வைத்துக்கொண்டு அவர் காட்டும் ஆட்டிட்யூட் நிச்சயம் சரி கிடையாது. அப்படித்தான் தற்போது அவர் முதுவிடம் பேசி நன்றாக வாங்கி கட்டிக் கொண்டிருக்கிறார்.

வேலியில் போற ஓணானை எடுத்து வேட்டியில் விட்ட கதையாக முத்துவிடம் அவர் சிக்கிவிட்டார். சும்மா விடுவாரா அவர் ஆனந்தியை தெறித்து ஓடவிட்டு மாஸ் காட்டி இருக்கிறார் முத்து.

ஹோட்டல் ஊழியர்கள் கெஸ்ட் ஆக வந்திருப்பவர்களிடம் இப்படித்தான் கேள்வி கேட்பார்களா ஹோட்டலுக்கு வரும் எல்லோரும் இனிமையாக தான் பேச வேண்டும் என்ற ரூல்ஸ் இருக்கிறதா என ஆனந்தியை ஒரு வழி செய்துவிட்டார்.

எங்க போனாலும் கேட் போடுறானே இப்ப எப்படி தப்பிக்கிறது என ஆனந்தியும் திக்கு முக்காடி போய்விட்டார். அதன் பிறகு வழக்கம் போல அழுது சீன் போட்டு ஒரு டிராமா வை ஆரம்பித்து விட்டார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கும் நிலையில் ரசிகர்கள் படுமோசமாக அவரை திட்டி வருகின்றனர்.