எனக்கு இவர் தான் பெஸ்ட் என திருமணமான நடிகரை கூறும் ரைசா வில்சன்.! அவரே வெளியிட்ட பதிவு.

raisa-wilson

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்து தற்பொழுது தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து மிகவும் பிஸியாக இருந்து வருபவர் தான் நடிகை ரைசா வில்சன்.  இவர் மாடலிங்காக பணியாற்றி வந்தார் இதன் மூலம் இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.

இந்நிகழ்ச்சியிலிருந்து இவர் பாதியிலேயே வெளியேறி இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் இவருக்கென ஒரு நல்ல மேஜை இருந்தது. இந்நிகழ்ச்சிக்குப் பிறகு தனுஷ் நடிப்பில் வெளிவந்த வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் துணை நடிகையாக நடித்து இருந்தார்.

பிறகு ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து பியார் பிரேமா காதல் திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். இத்திரைப்படம் முழுக்க முழுக்க ரொமான்ஸ் மையமாக வைத்து இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று இருந்தது.

இவ்வாறு தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் இவர் கடைசியாக இவர் நடிப்பில் எஃப்ஐஆர் வெளியானது. அப்படிப்பட்ட நிலையில் இவரும் மற்ற நடிகைகளை போல சமூக வலைதளங்களில் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளிவருவது தொடர்ந்து ரசிகர்களிடம் உரையாடுவது என சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

raisa wilson
raisa wilson

அந்த வகையில் சமீபத்தில் ரசிகர்களிடம் உரையாடிய ரைசாவிடம் ரசிகர் ஒருவர் நீங்கள் பணிபுரிந்ததில்  உங்களுடைய பெஸ்ட் கோ ஸ்டார் யார் எனக் கேட்டார்  அதற்கு  ரைசா வில்சன்  வெளிப்படையாக பதில் அளித்துள்ளார். அதாவது காதலிக்க யாருமில்லை படத்தில் தன்னுடன் நடித்திருந்த ஜிவி பிரகாஷ் தான் பெஸ்ட் போஸ்டர் என கூறிவுள்ளார் அவர் சூப்பர் டூப்பர் மேன் என்றும் சூட்டிங் ஸ்பாட்டில் அடிக்கடி ஜோக்கடித்து அனைவரையும் மகிழ்வித்தார் அந்த செட்டை பாஸிடிவ்வாகவும் வைத்திருப்பார் என கூறிவுள்ளார்.