பிக்பாஸ் ஆறாவது சீசனில் 21 போட்டியாளர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் ராபர்ட் மாஸ்டர் தன்னுடைய மனைவியை பிரிந்ததற்கான. காரணத்தை தற்பொழுது கூறியுள்ளார் அதாவது இவர் குறித்து நடிகை வனிதா விஜயகுமார் ராபர்ட்டை நான் ஒரு பப்ளிசிட்டிக்காக தான் யூஸ் பண்ணிக் கொண்டேன் அவனுக்கு ஏற்கனவே கல்யாணமாகி ஒரு குழந்தையும் இருக்கிறது ஆனால் இதுவரையிலும் நான் அவர்களை பார்த்ததில்லை என்று கூறியிருந்தார்.
அதில் ராபர்ட் மாஸ்டர் கூறியதாவது, என்னுடைய அம்மா, அப்பா இருவருமே டான்ஸ் மாஸ்டர் தான் நான் எங்கள் வீட்டில் கடைசிப் பிள்ளை என்பதால் அவர்களுக்கு என்னை மிகவும் பிடிக்கும், ஆனால் சின்ன வயதிலேயே எனக்கு போலியோ பாதிப்பு இருந்ததால் கால் சரியாக நடக்க வரவில்லை. அதன் பிறகு தன்னுடைய தந்தையின் முயற்சியினால் நான் அதிலிருந்து குணமானேன்.
இதனைத் தொடர்ந்து என் நடனத்தில் தொடர்ந்து தன்னுடைய கவனம் செலுத்தி வந்தேன் இந்த நேரத்தில் தான் எனக்கு காதல் வந்தது. அந்தப் பெண்ணின் பெயரை சொல்ல விருப்பமில்லை ஆனால் நான் அந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டேன். எங்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது ஆனால் அந்த குழந்தை பிறந்த உடனே நாங்கள் பிரிந்து விட்டோம்.
ஏன் அந்த முடிவை எடுத்தோம் என எனக்கு தெரியவில்லை ஆனால் நான் சுத்தமாக படிக்கவில்லை எனக்கு அறிவே இல்லை என சொன்னாள். பிறகு என்னுடைய மகளுக்கு நான் தான் அப்பா என தெரியுமான்னு கூட எனக்கு தெரியவில்லை. இவ்வாறு என்னை விட்டு பிரிந்தவுடன் என்னுடைய முதல் மனைவி வேறு ஒரு திருமணம் செய்து கொண்டாங்க.
ஆனால் என்னுடைய மகளுக்கு நான் தான் அப்பான்னு நான் இறந்த பிறகாவது சொல்லுங்க என கூறி எமோஷனலாக கண்கலங்கினார். அதன் பிறகு தொடர்ந்து பேசி வந்த இவர் இந்த ஷோவை அவளும் பாப்பாள் இதன் மூலம் என்னை தெரிந்து கொள்வார் என்பதற்காகத் தான் இந்த நிகழ்ச்சிக்கு வந்தேன். இரண்டு வயது வரை என்னுடைய குழந்தையை பார்த்திருக்கிறேன், பிறகு ஒரு முறை 7 வயதில் பார்த்தேன்.
அப்பொழுது என்னுடைய மனைவி உடன் பைக்கில் வந்தார் அந்த நேரத்தில் என்னுடைய மனைவி தன்னுடைய மகளிடம் அங்கு பாரு அங்கிள் அவருக்கு ஹாய் சொல்லு என கூற அவளும் ஹாய் எனக் கூறினார் இவ்வாறு அது கூறியது எனக்கு மிகுந்த மன வேதனையாக இருந்தது மிகப்பெரிய வலி எனவும் கூறினார் ராபர்ட்.