விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் அறிமுகமான காலகட்டத்தில் இருந்து தற்போது வரையிலும் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் பிக்பாஸ் தொடர்ந்து போட்டியாளர்களுக்கிடையே சண்டையை மூட்டி விடும் வகையில் ஏராளமான டாஸ்க்கள் கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
இந்நிலையில் தற்பொழுது இந்த வாரம் ராஜா ராணி டாஸ்க் நடைபெற்று வருகிறது. அதில் ராபர்ட் மற்றும் ரட்சிதா இருவரும் ராஜா ராணி ஆக இருந்து வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் ராபர்ட் மாஸ்டர் எப்பொழுதும் இரட்சிதா பின்னாடியே சுற்றிவரும் நிலையில் இந்த டாஸ்க் அவருக்கு மிகவும் சாதகமான ஒன்றாக அமைந்திருக்கிறது. உண்மையாகவே ரட்சிதா தன்னுடைய ராணி என்பது போன்று அலப்பறைகள் செய்து வருகிறார் இது ரசிகர்களை பெரும் ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் தற்பொழுது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் கூடவே இருந்து ரட்சிதா தன்னை ஏமாற்றிவிட்டார் என்று ராபர்ட் மாஸ்டர் கண்கலங்கி அழுகிறார். எனவே சக போட்டியாளர்கள் பலரும் இவருக்கு ஆறுதல் கூறியும் மிகவும் அழ ரசிகர்கள் இதெல்லாம் ஓவர் என கிண்டல் செய்து வருகிறார்கள்.
அதாவது இந்த டாஸ்க்கில் அசீம் மற்றும் ரட்சிதா இருவரும் சேர்ந்து தங்களது கொடுத்துள்ள மேப்பை வைத்து மியூசியத்தில் இருக்கும் பொருள்களை திருட வேண்டும் இதை அவர்கள் திட்டமிட்டபடி ரகசியமாக செய்து முடித்துள்ளார்கள். இந்த டாஸ்க் முடிந்துள்ள நிலையில் பிக்பாஸ் அனைவரும் முன்னிலையிலும் போட்டு காமிக்கிறார்.
தன் கூட இருந்து கொண்டே ராணி இப்படி ஒரு வேலை செய்திருப்பதை பார்த்து தாங்க முடியாமல் ராபர்ட் மாஸ்டர் சோகத்துடன் வீட்டை விட்டு வெளியே வருகிறார். ஒரு கட்டத்தில் ரட்சிதா தன்னை இப்படி ஏமாற்றி விட்டார் என்று கூறி கதறி அழுகிறார் ஒரு விளையாட்டை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாத இவர் ஏதோ நிஜ வாழ்க்கையில் ஏற்பட்டது போல ஓவராக சீன் போட்டு வருகிறார்.
இவர் கதறி அழுவதை பார்த்த ரட்சிதாவும் நாங்கள் தவறு செய்து விட்டோமோ என்ற எண்ணத்தில் அவரிடம் போய் மன்னிப்பு கேட்கிறார் ஆனால் ராபர்ட் மாஸ்டர் மீண்டும் அழ தொடங்குகிறார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ரட்சிதாவின் மனதில் இடத்தை பிடிப்பதற்காகவும் தன்னை அவர் வந்து சமாதானப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் ராபர்ட் மாஸ்டர் இவ்வாறு செய்கிறார் என கூறி வருகிறார்.