விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் கலந்த ஐந்து சீசனுக்கும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வந்த நிலையில் தற்போது 6வது சீசன் அறிமுகமாகிய ரசிகர்கள் மத்தியில் பெரிதும் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.
அதாவது மற்ற சீசன்களை விட இந்த சீசனில் 21 போட்டியாளர்களுடன் இந்நிகழ்ச்சி தொடங்கப்பட்டது தற்பொழுது 5 போட்டியாளர்கள் வெளியேறி உள்ள நிலையில் 16 போட்டியாளர்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது இதனால் தொடர்ந்து போட்டியாளர்களுக்கு இடையே சண்டை ஏற்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.
இப்படிப்பட்ட நிலையில் 21 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் தான் திருநங்கை ஷிவின். இவர் தன்னுடைய சிறந்த விளையாட்டுத் திறமையை வெளிப்படுத்தி வரும் நிலையில் இந்நிகழ்ச்சியின் பைனல் லிஸ்டில் இவரும் ஒருவராக இருந்து வருகிறார். அதற்கான காரணம் இவர் தன்னுடைய சிறந்த விளையாட்டுத் திறமையை வெளிப்படுத்தி வருவது தான்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் ஷிவினுக்கு கதிரவனின் மீது பல நாட்களாக க்ரஷ் இருந்து வருகிறது இதனை அவரிடமே வெளிப்படுத்தி இருக்கிறார் மேலும் இரவில் ஒரு மணி நேரமாக கதிரவனுடன் அமர்ந்து தனியாக பேசிய சேவிங் உங்களை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் என பலமுறை தன்னுடைய காதலை மறைமுகமாக கூறியிருக்கிறார் அந்த காதல் புரிந்தும் தனக்கு புரியவில்லை என கதிரவன் பதில் அளித்துள்ளார்.
Part 2
Roast
Kathir vs Shivin#BiggBossTamil #BiggBoss#BiggBossTamil6 pic.twitter.com/T5TVpofVHM— BIGG BOX TROLL (@drkuttysiva) November 15, 2022
இதனைத் தொடர்ந்து மற்றொரு வீடியோவில் அதில் அவரை பற்றி பெருமையாக பேசிய கதிரவன் பின்னர் தன்னை விட்டுடு என கூறும் படி ஷிவினிடம் கையெழுத்து கும்பிட்டு கேட்டுள்ளார். அதோடு மட்டுமல்லாமல் இந்த வீட்டில் நாம் டாஸ்கிக்காக மட்டும் பேசினால் போதும் மற்றபடி பேச தேவையில்லை உனக்கு இது எல்லாம் புரியாதா மரமண்டை என ஷிவினைப் பார்த்து கேட்டுக்கொண்டார்.
அது மட்டுமல்லாமல் நான் போகிறேன் மேலே மேலே என்ற பாடலை பாடிக் கொண்டிருக்கிறார் இந்த வீடியோ தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இவ்வாறு கதிரவன் ஷிவின் மனசை புண்படுத்தக் கூடாது என்பதற்காக டாஸ்கின் மூலம் மிகவும் ஜாலியாக கூறி இருக்கிறார்.