தற்பொழுதெல்லாம் சின்னத்திரையில் நடிக்கத்தான் அனைவரும் விரும்பி வருகிறார்கள் பொதுவாக சினிமாவில் நடிக்க வேண்டும் என்று விரும்புவர்கள் சின்னத்திரையை தேர்ந்தெடுக்கிறார்கள். ஏனென்றால் வெள்ளித்திரையைவிடவும் சின்னத்திரையில் நடித்து வரும் நடிகர் நடிகைகள் விரைவில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து விடுகிறார்கள்.
அந்த வகையில் என்னதான் சின்னத்திரையில் நடித்து வந்தாலும் தொடர்ந்து அவர்கள் சீரியலில் நடிப்பது வழக்கமாக வைத்திருக்க மாட்டார்கள் ஒரு சிலர் அடிக்கடி மாற்றப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் தற்பொழுது ஒரு சீரியலில் இருந்து முக்கிய நடிகை ஒருவர் விலகியதால் புதிய நடிகை ஒருவரை அறிமுகப்படுத்தி உள்ளார்கள்.
இந்த தகவல்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது முன்னணி வகித்து வரும் சீரியல்தான் பாவும் கணேசன்.
இந்த சீரியலில் ஹீரோயினாக நடித்து வந்த விசாலினி என்ற நடிகை நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக லதா ராவ் என்கின்ற புதிய நடைமுறை அறிமுகமாகியுள்ளார். லதா ராவ் புதிய நடிகை என்று கூறமுடியாது காலகாலமாக சீரியலில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. விசாலினி தற்பொழுது ஜீ தமிழ் சீரியல் ஒன்றில் நடிக்க தொடங்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
லதா கடந்த சில வருடங்களாக சின்னத்திரையில் பெரிதாக நடிக்காமல் இருந்து வந்தார் இப்படிப்பட்ட நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் டிவியின் மூலம் என்ட்ரி கொடுக்கிறார் எனவே தற்போது இவருக்கு பதிலாக இவர்தான் என்று கூறிய புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
