விரைவில் முடிய இருக்கும் விஜய் டிவி பாரதிகண்ணம்மா சீரியல்.! இதுகுறித்து வில்லி வெண்பா போட்ட பதிவு..

bharathi-kannama-serial

விஜய் டிவியில் அறிமுகமான காலகட்டத்தில் படு ஹிட்டா ஓடிவந்து தற்பொழுது எப்பொழுது எழுத்த முடிவீங்க என ரசிகர்கள் கூறும் அளவிற்கு ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் கடந்த பல மாதங்களாக தொடர்ந்து ஒரே கதையை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருவதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் வெறுப்பினை ஏற்படுத்திவுள்ளது.

மேலும் இந்த சீரியலை பழைய நிலைமைக்கு கொண்டு வர வேண்டும் என இந்த சீரியலின் இயக்குனர் பல முயற்சிகள் செய்து வந்தாலும் அது தோல்வியடைகிறது. அந்த வகையில் தொடர்ந்து பல கதாபாத்திரங்களை புதிதாக களம் இறக்கி இருந்தார்கள். ஆனால் எதுவும் வேலைக்கு ஆகாத நிலையில் தற்போது ராஜா ராணி 2 சீரியலுன் மகா சங்கமமாக ஒளிபரப்பாகி வருகிறது.

ராஜா ராணி 2 மற்றும் பாரதிகண்ணம்மா இரண்டு சீரியல்களின் இயக்குனர் ஒருவர் என்பதால் இரண்டாவது முறையாக மகாசங்கமும் ஒளிபரப்பாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் தான் ஃப்ரீனா. இவர் வெண்பா என்ற கேரக்டரில் நடித்திருந்தார்.

கர்ப்பமாக இருக்கும் பொழுது கூட சீரியலில் நடித்து வந்த இவர் குழந்தை பிறந்த பிறகு சில நாட்கள் கழித்து மீண்டும் சீரியலில் இணைந்தார். கதாநாயகியை விட இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வந்த நிலையில் தற்போது இவரரின் கேரக்டர் டம்மியாகி உள்ளது.

இப்படிப்பட்ட நிலையில் கண்ணம்மா தான் என்னுடைய அம்மாவா என்ற சந்தேகம் ஹேமாவிற்கு இருந்து வரும் நிலையில் ஒரே ஒரு டிஎன்ஏ டெஸ்ட் எடுத்தால் அனைத்து உண்மைகளும் தெரியவரும் ஆனால் அதனை செய்யாமல் இந்த சீரியலில் கண்ணம்மா பாரதியின் மீது அன்பாக இருக்க பாரதியின் கண்ணம்மாவை நம்பாமல் தனது வெறுப்பை காட்டி வருகிறார்.

farina
farina

இவ்வாறு போய்க் கொண்டிருக்கும் நிலையில் சமீபத்தில் ஃப்ரீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடும் பொழுது பாரதிகண்ணம்மா சீரியல் எப்பொழுது முடியும் என கேட்டதற்கு அவர் டிஎன்ஏ டெஸ்ட் செய்திடுவோம்,செஞ்சுடுவோம் என பதில் கூறியுள்ளார்.