தனது அம்மாவை நினைத்து பெருமைப்படும் லட்சுமி.! இன்றைய எபிசோட்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வரும் நிலையில் தொடர்ந்து ஏராளமான டுவிஸ்ட்கள் நிறைந்து இருக்கிறது. அந்தவகையில் அறிமுகமான காலகட்டத்தில் டிஆர்பி-யில் தொடர்ந்து முன்னணி வகித்து வந்த பிறகு  போதும் சொல்லுமளவிற்கு தள்ளப்பட்ட சீரியல்தான் பாரதி கண்ணம்மா.

இந்த சீரியலில் கிட்டத்தட்ட ஒன்பது வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வரும் பாரதி மற்றும் கண்ணம்மா எப்படி இணைகிறார்கள் இதற்காக இவர்களின் மகள்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பதை மையமாக வைத்தே தற்பொழுது உள்ள எபிசோடு ஒளிபரப்பாகி வருகிறது.

இவ்வாறு இவர்களின் வாழ்க்கையில் பிரச்சனையாக இருந்து வரும் வெண்பாவிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இவரின் அம்மா ஷர்மிளா பல மிரட்டல்களை கொடுத்து வெண்பாவை மற்றொருவருக்கு திருமணம் செய்து வைக்க பல முயற்சிகளை செய்து வருகிறார் சத்தியம் செய்து கொடுத்திருக்கிறார் வெண்பா.

இப்படிப்பட்ட நிலையில் விக்ரம் தற்பொழுது மருத்துவமனை ஒன்று திறந்துள்ளார் அதில் அட்மினிஸ்டராக கண்ணம்மா வேலை பார்க்கிறார்.  பாரதி மற்றும் கண்ணம்மா அடிக்கடி இருவரும் சந்தித்துக் கொள்கிறார்கள். இதன் மூலமாவுது இவர்கள் இருவரும் இணைவார்களா என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை எல்லாம் முடித்து விட்டு கண்ணம்மா  வீட்டிற்கு போகும் பொழுது லட்சுமி தூங்காமல் அம்மாவிற்காக காத்து வருவது மட்டுமல்லாமல் படித்து வருகிறார் கண்ணம்மாவை புடவை மற்றும் ஜடி கார்ட் ஆகியவற்றுடன் பார்த்த லட்சுமி மிகவும் பெருமையாக நினைத்து தனது அம்மாவிடம் பாசமாக நடந்து கொள்கிறாள்.