சில சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவரும் நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் தற்போது பெரும்பாலும் கோவில் காட்சிகள் இடம் பெறும் வகையில் ஒளிபரப்பி வருகிறார்கள். எனவே ரசிகர்கள் நீங்களும் பக்தியில் புகுந்து விட்டீர்களா இனிமே கோவிலிலேயே இணைந்து ஒரு மகாசங்கமத்தை போட்டுடுங்க சூப்பரா இருக்கும் என சொல்லி கிண்டல் செய்து வருகிறார்கள்.
இந்த சீரியல் நான்கு கண்ணன் தம்பிகளின் பாச உறவினையும், தனது கணவன் தம்பிகளை பிள்ளைபோல் வளர்க்கும் அண்ணியின் பாசத்தையும், மருமகள்களின் ஒற்றுமையையும் இவ்வாறு கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வரும் இவர்களை எப்படி எல்லாம் எதிரிகள் பிரிக்க வேண்டும் என திட்டமிடுகிறார்கள் அதிலிருந்து இந்த கூட்டு குடும்பம் எப்படி தங்களை பாதுகாத்துக் கொள்கிறது என்பதை மையமாக வைத்தும் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.
இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் முல்லைக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்பதனால் குடும்பத்தில் உள்ளவர்கள் வீடு கட்டுவதற்காக வைத்திருந்த பணத்தை வைத்து மூல்லைக்கு மருத்துவ செலவு செய்து எப்படியாவது குழந்தை பாக்கியத்தை பெற்றுக் கொடுத்து விடலாம் என முடிவு செய்துள்ளார்கள்.
இன்னொரு பக்கம் முல்லை கோவிலுக்கு சென்று தனது குடும்பத்திற்கு தெரியாமல் கஸ்தூரியின் பேச்சை கேட்டு குழந்தை பெற வேண்டும் என்பதற்காக பல வேண்டுதல்களை செய்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் வெளிவந்துள்ள ப்ரோமோவில் முல்லை கோவிலில் வேண்டுதல் செய்வை அறிந்த கதிர் பதட்டத்துடன் கோவிலுக்கு செல்கிறான்.
அங்கு முல்லை இரண்டு முறை கோவிலை முட்டி போட்டு சுற்றி வந்தாள் பிறகு கையில் தீச்சட்டி ஏந்தி கோவிலை சுற்றி வந்தாள். பிறகு கதிரிடம் இதேபோல் நான் வேண்டுதல் செய்வதை வீட்டில் யாரிடமும் கூறக் கூடாது என்று சொல்லிவிட்டு மயங்கி விழுந்து விடுகிறாள். அதிர்ச்சி அடைந்த கதிர் முல்லை தூக்கிக்கொண்டு செல்கிறான்.