விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.அந்த வகையில் சில மாதங்களாக மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்தான் பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் அறிமுகமான காலகட்டத்தில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது பிறகு சிறிது காலமாக பல விமர்சனத்தை பெற்று வந்த நிலையில் மீண்டும் முன்னணி வகிக்க வேண்டும் என்பதற்காக பல டுவிஸ்டுகளை வைத்து மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பி வருகிறார்கள்.
ஒன்பது வருடங்களாக பிரிந்திருந்த பாரதி மற்றும் கண்ணம்மா சில வாரங்களாக வெளியாகி வரும் எபிசோடுகளில் கொஞ்சம் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் இடம்பெற்று வருகிறது. எனவே இதனால் மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படிப்பட்ட நிலையில் பாரதிக்கு கண்ணம்மா மிகப் பெரிய ட்விஸ்ட் ஒன்றை தந்துள்ளார்.
அதாவது பாரதி மற்றும் கண்ணம்மா எப்படி, எப்பொழுது ஒன்றுசேர்வார்கள் என்பதை வைத்துதான் ஒளிபரப்பாகி வருகிறது எனவே ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. கண்ணம்மா தனது மகளின் படிப்பு செலவிற்காகவும்,வீட்டு செலவுக்கு பணம் வேண்டும் என்பதற்காக மாவரைத்து அதனை விற்று வந்தாள்.
ஆனால் தற்பொழுது புதிய வேலை ஒன்றில் பணியாற்ற இணைந்துள்ளார் அதில் பாரதி சீப் சர்ஜியனாக பணியாற்ற உள்ள ஹாஸ்பிடல் திறப்பு விழா நடைபெறுகிறது எனவே ஓபன் செய்வதற்காக ரிமோட்டை கேட்கும்பொழுது அங்கிருந்து ரிமோட் என்கிட்ட இருக்கு சார் என்று கண்ணம்மா கூறுகிறாள். அதற்கு பாரதி நான் பணியாற்ற உள்ள இந்த ஹாஸ்பிட்டலில் இவளா என மனதில் நினைக்கிறான்.