விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பாரதி கண்ணம்மா என்னும் நாடகத் தொடர்,என்னதான் கதையை இழுத்துக்கொண்டு சென்றாலும் மக்களிடையே அந்த நாடகத்தின் மீது உள்ள ஈர்ப்பு இன்றளவும் மாறவில்லை,விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் நாடகங்களில் உள்ள கதைகளும் அக்கதைகளில் வரும் டுவிஸ்ட்டுகளுமே விஜய் தொலைக்காட்சியின் டிஆர்பிக்கு காரணம்.
இந்த நிலையில் தற்போது வெளியான பாரதி கண்ணம்மாவின் ப்ரோமோவில், டாக்டர் பாரதிக்கு “மனிதநேய மருத்துவர்” அவார்டு வழங்கப்படுகிறது.இதை பார்த்தவுடன் நம் அனைவருக்கும் தோன்றும் ஒரே ஒரு விஷயம் இவர் என்ன செய்துவிட்டார்? இவருக்கு ஏன் இந்த விருது? என்று அனைவரும் நினைப்பார்கள், ஏனென்றால் பாரதியின் குடும்பத்திலும் சரி அவரது வாழ்க்கையிலும் சரி பிரச்சனைகள் இல்லாத நாட்களே இல்லை இந்த நிலையில் மருத்துவமனைக்கும் சரியாக செல்வதில்லை, இப்படி ஒரு நிலைமை இருக்கும் பொழுது இவருக்கு ஏன் இந்த விருது என்று அனைவரையும் சிந்திக்க வைக்கிறது.
பாரதி மற்றும் கண்ணம்மா இருவரையும் பிரித்து வைத்த வெண்பா முன்பெல்லாம் பாரதியுடன் சந்தோஷமாக இருந்தாள், ஆனால் தற்பொழுது பாரதி வெண்பாவை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை.ஏன் முன்பெல்லாம் வெண்பாவை இருமுறை திருமணம் செய்ய பாரதி நினைத்த போது பாரதியின் குடும்பத்திற்கு தெரிந்து அந்த கல்யாணம் நிறுத்தப்பட்டது,ஆனால் இப்பொழுது ஏன் பாரதி வெண்பாவை வெறுக்கிறார் என்பது கேள்விக்குறியாக உள்ளது.
இதற்கிடையில்தான் வெண்பாவின் அம்மா வெண்பா உறங்கிக் கொண்டிருக்கும் பொழுது மேலே தண்ணீரை ஊற்றி பாரதி விருது வாங்கிக் கொண்டிருக்கிறான் நீ ஏன் உறங்கிக் கொண்டு இருக்கிறாய்? என்று வெண்பாவை எழுப்புகிறார். அதற்கு வெண்பா என்ன அவார்டு? என்று கேட்டதும் அதற்கு அவரது அம்மா நீ பாரதியை காதல்தானே செய்கிறாய் உனக்கு தெரியாதா என்று கேட்கிறார்.
அதன்பிறகு வெண்பாவின் அம்மா வெண்பாவிடம் “இனி நீ அவனை மறந்து விடு நான் சொல்லும் பையனை திருமணம் செய்துகொள்” என்று கூறுகிறார், அதற்கு வெண்பா முடியாது என்று கூறவே அவரது அம்மா நான் சொன்னது சொன்னதுதான் இதில் ஏதும் மாற்றமில்லை என்று கூறிவிட்டு செல்கிறார் இத்துடன் ப்ரோமோ முடிவடைந்தது.