தனது அப்பாவை திருமணம் செய்து கொள்ளுமாறு கண்ணம்மாவிடம் கேட்கும் ஹேமா.! டுடே எபிசோட்..

bharathikannama
bharathikannama

பாரதி கண்ணம்மா என்னும் நாடகம் விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டு வரும் நாடகங்களில் மிகவும் முக்கியமான ஒன்று. என்னதான் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பப்பட்டு வந்தாலும் இதற்கான ரசிகர்கள் கூட்டம் குறையவில்லை. பாரதி கண்ணம்மாவின் குழந்தைகள் லட்சுமி, ஹேமா இவர்கள் இருவரும் அப்பா இவர்தான் அம்மா இவர்தான் என்று தெரியாமல் எதர்ச்சியாகவே தன்னுடைய அம்மாவுடனும் அப்பாவுடனும் வாழ்ந்து வருகிறார்கள்.

இதில் பாரதி லட்சுமி தன்னுடைய குழந்தை என்று அறியாமல் அவளை தன் குழந்தையாகவே நினைத்து வருகிறார். இதனால் நாடகத்தில் சுவாரசியமான கட்டங்களும் விருவிருப்பான கட்டங்களும் உருவாகின்றது. மேலும் ஹேமா சமையல் அம்மா, சமையல் அம்மா என்று கண்ணம்மாவையே சுற்றி வருகிறாள், அதைப்போல லட்சுமியும் டாக்டர் அப்பா என்று பாரதியை சுற்றி வருகிறாள்.

இரு பெண் குழந்தைகளை மையமாக எடுக்கப்பட்ட நாடகம், தொலைக்காட்சியில் காண்பதற்கு மிக அழகாக இருக்கும் நிலையில் தான் லட்சுமியும் தன் அப்பா யார் என்பதை அறிந்து விட்டால், இத்தனை காலம் அப்பாவை பிரிந்து விட்டோம் இனியும் அப்படி இருக்கக் கூடாது என்று விரும்புகிறாள் லட்சுமி.

ஹேமாவும் சமையல் அம்மா போன்ற ஒரு அம்மா வேண்டும் என்று விரும்புகிறாள், அதனால் கண்ணம்மாவின் வீட்டிற்கு செல்லும் ஹேமா, கண்ணம்மாவிடம் கூறுவது “லட்சுமியின் அப்பாதான் லட்சுமி பிறந்ததிலிருந்து இதுவரை வந்து பார்க்கவில்லை நீங்கள் அவரை விவாகரத்து செய்துவிட்டு எனது அப்பாவை திருமணம் செய்து கொள்கிறீர்களா?” என்று கேட்கிறாள்.

இதை மறைந்திருந்து கேட்கும் ஹேமா நல்லது நடந்தால் சரி நான் என் அப்பாவுடன் சேர வேண்டும் அது எப்படி நடந்தால் என்ன,என்று நினைத்துக் கொள்கிறாள். இதை தொடர்ந்து ரசிகர்கள் அனைவரும் நாடகத்தில் என்ன நடக்கும் என்று ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.