விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்றுதான் பாரதிகண்ணம்மா. இந்த சீரியல் தொடர்ந்து ஒரே கதையை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருவதால் ரசிகர்களை எப்போது இந்த சீரியலை முடிப்பீர்கள் என்று கூறி வருகிறார்கள். பல எபிசோட்களாக கண்ணம்மா எந்த தப்பும் செய்யாத பெண்ணாக இருந்தாலும் சந்தேகத்தில் பாரதிகண்ணம்மா ஏற்றுக் கொள்ளாமல் இருந்து வரும் எப்படி எபிசோடுகள் தான் ஒளிபரப்பாகி வருகிறது.
இப்படிப்பட்ட நிலையில் தற்போது சாரதி மற்றும் வெண்பாவிற்கு விரைவில் திருமணம் நடக்க இருக்கிறது. இதனைத் தொடர்ந்து லக்ஷ்மி மற்றும் ஹேமா இருவருக்கும் பாரதி மற்றும் கண்ணம்மா தான் இவர்களுடைய பெற்றோர் என்றும் இவர்கள் இருவரும் அக்கா தங்கை என்பதையும் தெரிந்து கொண்டார்கள்.
சமீபத்தில் ஹேமா என்னுடைய அம்மா யார்?நீங்க யார டிவோர்ஸ் செய்யப் போறீங்க? என்று தொடர்ந்து கேட்டு வருகிறார். மேலும் ஒரு நாள் முழுவதும் சாப்பிடாமல் இருந்ததால் தற்பொழுது மயக்கம் போட்டு விழுந்து விட்டார். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது பாரதி தனது குடும்பத்தின் மீதும் கண்ணம்மாவின் மீது கடும் கோபத்தில் இருந்து வருகிறார்.
இன்று வெளியாகியுள்ள ப்ரோமோவில் சாரதி சாமிக்கு மாலை போடுகிறார். எனவே வீட்டில் காலையில் எழுந்தவுடன் குளித்து விட்டு சாமி பாட்டு போட்டு விடுகிறார். வீடு முழுவதும் புகையாக இருப்பதால் வெண்பா மற்றும் சாந்தி இருவரும் எழுந்து வந்து பார்க்கிறார்கள். சாரதி என்னுடைய அத்தை வருவதற்குள் வெண்பாவை மனதை மாற்ற வேண்டும் என்று வேண்டுகிறான்.
இன்னொரு பக்கம் ஹேமா பாரதியிடம் என்னுடைய அம்மாவை தான டிவோர்ஸ் செய்யப் போறீங்க. யார் அவங்க எனக்கு தெரியும் நீங்க ஏன் எங்கிட்ட பொய் சொல்றீங்க. உண்மையை சொல்லுங்க டாடி என்கிட்ட மறக்காதீங்க. இன்று தொடர்ந்து கேட்டு வருவதால் பாரதி ஹேமாவிடம் உண்மையை சொல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.