தன்னுடைய வயிற்றில் வளரும் குழந்தைக்கு பாரதியை அப்பாவாக இருக்க சொல்லும் வெண்பா.! பாரதி கொடுத்த அதிர்ச்சி..

bharathi-kannama
bharathi-kannama

தமிழ் சின்னத்திரையில் தொடர்ந்து பல மாற்றங்களுடன் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாரதி கண்ணம்மா இன்றைய எபிசோடில் ஸ்கூலில் சில தோழிகள் ஹேமாவை சீனு என அழைக்க கோபப்படும் லட்சுமி அவர்களுடன் சண்டை போட மிஸ் நாளைக்கு வரும் பொழுது நீங்க அஞ்சு பேரும் பேரண்ட்ஸோட தான் வரணும் அதுவரையிலும் உங்களை கிளாசுக்கு உள்ள விடமாட்டேன் என கூறிவிடுகிறார்.

இப்படிப்பட்ட நிலையில் வெண்பா பாரதியை ஒரு இடத்திற்கு வருமாறு கூற இருவரும் சந்தித்து பேசுகிறார்கள் அங்கு வெண்பா நான் ஒரு மாதத்திற்கு முன்பு பப் ஒன்றுக்கு சென்றேன் அங்கு நானும் என் தோழியும் தான் டான்ஸ் ஆடிக்கிட்டு இருந்தேன் பிறகு அவ கிளம்பிட்டார். எனக்கு ஒரு ஜூஸ் கொடுத்தாங்க அது குடிச்சதும் நான் மயங்கிட்டேன் மறுநாள் காலையில் எழுந்து பார்க்கும் பொழுது ஹோட்டலில் ஒரு ரூமில் நான் அலங்கோலமாக இருந்தது தெரியவந்தது.

யாரோ என்னை நாசம் பண்ணிட்டாங்க ஆனால் யாருனு தேடியும் கிடைக்கவில்லை இப்பொழுது என்னுடைய வயிற்றில் ஒரு குழந்தை வளர்கிறது எனவே அதனை கலைப்பதற்கான மனசு வரவில்லை இதனை ரோகித் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள மாட்டான் அவனுக்கு பின்னாடி விஷயம் தெரிந்தால் என்னை விட்டுட்டு போயிடுவான் எனக்கு நீ தான் உதவி பண்ணனும் என சொல்ல பாரதி என்ன உதவி என கேட்கிறார்.

எனக்கு என் குழந்தைக்கும் ஒரு அங்கீகாரம் வேண்டும் அப்பா வேண்டும் தயவு செய்து என் கழுத்துல நீ தாலி கட்டு ஊரறிய இல்லை என்றாலும் ஊரோரம் ஏதாச்சும் ஒரு கோவிலில் திருமணம் செய்து கொள்ளலாம் நான் எங்கேயாவது போயிட்டு தனியாக வாழ்ந்துகிறேன் என சொல்ல பாரதி அதிர்ச்சி அடைகிறார். யாரோ பெத்த பிள்ளைக்கு நான் எப்படி அப்பாவாக இருக்கிறது இது உன்னுடைய கனவில் கூட நடக்காது என பாரதி சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி விடுகிறார்.

பிறகு வெண்பா தன்னுடைய மனதிற்குள் உன்னை எப்படி என்னுடைய வழிக்கு கொண்டு வர வேண்டும் என்பதை எனக்கு தெரியும் என நினைத்து புதிய திட்டம் தீட்டுகிறார். லட்சுமி வீட்டிற்கு வந்தவுடன் கண்ணம்மாவிடம் ஸ்கூலில் நடந்த சண்டையை சொல்ல அவர் திட்டுகிறார் பிறகு இனிமேல் இப்படி எதுவும் நடக்கக்கூடாது என அறிவுரை சொல்லி இருக்கிறார் இதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.