பாரதியை அடைவதற்காக கேவலமான திட்டம் போட்ட வெண்பா.! அதனையும் உண்மை என நம்பும் மானங்கெட்ட பாரதி..

bharathi-kannama
bharathi-kannama

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் தொடர்ந்து ஏராளமான திருப்பங்கள் இருந்து வரும் நிலையில் இவ்வளவு நாளாக பாரதியின் இரண்டு மகள்களும் அவருக்கு பிறக்கவில்லை என வெண்பா பாரதியை நம்ப வைத்து கண்ணம்மாவிடம் இருந்து பிரித்து வைத்து வருகிறார். கடந்த பத்து வருடங்களாக கண்ணம்மா பாரதி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.

மேலும் ரோகித்துடன் குடித்துவிட்டு தவறு செய்த வெண்பா தற்பொழுது கர்ப்பமாக இருந்து வருகிறாள் எனவே இந்த குழந்தையை கலைத்து விடலாம் என வேலைக்காரி சாந்தி அறிவுரை கூறுகிறார். ஆனால் இதனை மறுத்த வெண்பா இந்த குழந்தையை வைத்து தான் பாரதியுடன் சேரப் போகிறேன் என கேவலமாக சதி திட்டம் போடுகிறார்.

எப்படி பாரதியின் குழந்தை அவருக்கு பிறக்கவில்லை என நம்ப வைப்பேனோ அதேபோல் அவனுக்கு பிறக்காது இந்த குழந்தையை அவனுடைய குழந்தைதான் என நம்ப வைத்து முட்டாள் பாரதியை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கூறுகிறார். இப்படிப்பட்ட நிலையில் வழக்கமாக சந்திக்கும் இடத்திற்கு வெண்பா பாரதி சந்திப்பதற்காக போக முடிவெடுக்கிறார். சொன்னவுடன் பாரதியும் அந்த இடத்திற்கு வருவதாக கூறுகிறார்.

இவ்வாறு கடந்த மூன்று வாரங்களாக பாரதி மருத்துவமனையில் தீவிரவாதிகளிடம் சிக்கிக்கொண்டதை வைத்து ஓடி வந்த நிலையில் தற்பொழுது அந்த சமயத்தில் போலீசார் கல்லூரியின் உதவியுடன் தீவிரவாதிகளை கைது செய்து சென்றால் மினிஸ்டரின் ஹார்ட் ஆபரேஷனும் இக்கடான சூழ்நிலையில் வெற்றிகரமாக நடந்து முடித்துள்ளது.

இவ்வாறு அவருடைய உயிரை காப்பாற்றியதற்காக பாரதிக்கு பொன்னாடை போற்றி விருது அளிக்கின்றனர். மேலும் போலீசார்கள், ஆர்மியில் இருப்பவர்கள் என பலரும் பாரதியை பாராட்டினர் இவரைத் தொடர்ந்து கண்ணம்மாவையும் வீர தமிழச்சி எனவும் பாராட்டினார்கள். இவ்வாறு பாரதியும் கண்ணம்மாவை ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு தன்னுடைய மனநிலையை மாற்றி வந்த நிலையில் இந்த சீரியல் முடிந்துவிடும் என அனைவரும் நினைத்தார்கள்.

ஆனால் வெண்பா தற்பொழுது என்னுடைய வயிற்றில் வளரும் குழந்தைக்கு பாரதி தான் அப்பா எனக் கூறி பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார்.இவ்வாறு பாரதியை திருமணம் செய்து கொள்ள வேண்டுமென வெண்பா வேறு ஒருவனுக்கு சொந்தமான குழந்தையை பாரதியின் குழந்தை என மாற்றி சொல்வது ரசிகர்கள் மத்தியில் பெரிதாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.