விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் தற்பொழுது தீவிரவாதிகளிடமிருந்து பாரதி கண்ணம்மா தப்பித்துள்ள நிலையில் இன்றைய எபிசோடில் கண்ணம்மா லக்ஷ்மிக்கு ஹேமா தன்னுடைய தங்கச்சி என்ற உண்மை தெரிந்து விட்டதாக சொல்ல சௌந்தர்யா அதிர்ச்சடைகிறார். எப்படி தெரிந்தது என கண்ணம்மாவிடம் கேட்க நடந்த விஷயங்களை கூற பிறகு சௌந்தர்யா சரி என கூறுகிறார்.
இதனை தொடர்ந்து ஆகில் அஞ்சலிக்கு தன்னை காப்பாற்றியதற்கு நன்றி சொல்லி எமோஷனலாக பேசுகிறார் மீண்டும் கண்ணம்மா நீண்ட நாட்களுக்குப் பிறகு எல்லோருக்காகவும் சௌந்தர்யா வீட்டில் சமையல் செய்ய பாரதி ரொம்ப பசிக்குது என சொல்ல பிறகு அனைவரும் கூப்பிடுங்க என சொல்ல எல்லோரையும் கூப்பிட்டு உட்கார வைக்கிறார்.
என்ன சாப்பாடு என சௌந்தர்யா கேட்க அதற்கு உப்புமா என்ன சொல்ல பாரதியும், லட்சுமியும் அதிர்ச்சி அடைகின்றனர் பிறகு அதற்கு தீவிரவாதி கிட்டயே மாட்டி இருக்கலாம் என நக்கலாக பாரதி கூறுகிறார். மேலும் கண்ணம்மா உம்மா ஒன்னும் கிடையாது வெஜ் புலாவ் செஞ்சு இருக்கேன் என அனைவருக்கும் பரிமாறுகிறார் எல்லோரும் சாப்பிட்டுவிட்டு கண்ணம்மாவின் சமையலை பாராட்டுகின்றனர்.
சௌந்தர்யா பாரதியிடம் இருக்கும் மாற்றத்தை பார்த்து அதிர்ச்சி அடைகிறார் பிறகு பாரதியிடம் இப்பயாவது கண்ணம்மா உன் மேல வச்சிருக்க அன்பையும் காதலையும் புரிந்து கொள் உன்னை அவளோட சேர்ந்து வாழ கட்டாயப்படுத்தல ஆனா யோசிச்சு நல்ல முடிவு எடு எனக் கூற பாரதி யோசிக்கிறான்.
பிறகு கண்ணம்மா குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது ஹேமா சாமியிடம் நான் நீங்க ரெண்டு பேரும் எப்பவும் இதே மாதிரி இங்கேயே இருக்கணும்னு வேண்டிக்குவேன் என சொல்ல பாரதி இதனைக் கேட்டு இன்னும் யோசிக்கிறார்.இதுதான் இன்றைய எபிசோடில் ஒளிபரப்பாக இருக்கிறது இவ்வாறு நடப்பதை பார்த்தால் பாரதி கண்டிப்பாக மனதை மாற்றிக்கொண்டு கண்ணம்மாவை ஏற்றுக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.