விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல்களில் ஒன்றான பாரதிகண்ணம்மா சீரியலில் பாரதி கண்ணம்மாவை சந்தேகப்பட்டு பத்து வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருகிறார். எனவே பாரதி தற்பொழுது டிஎன்ஏ டெஸ்ட் மூலம் தன்னுடைய குழந்தைகள் தனக்கு பிறந்ததா இல்லையா என்பதை தெரிந்து கொள்ள இருக்கிறார் இந்நிலையில் இவர் வேலை செய்து கொண்டிருக்கும் மருத்துவமனையில் கணவர் ஒருவர் பிரசவமான மனைவியை சந்தேகப்பட்டு அங்கு கூச்சல் போடுகிறார்.
அப்பொழுது பாரதி அந்த கணவரிடம் டிஎன்ஏ டெஸ்ட் எடுத்து பார்த்தால் அனைத்து உண்மைகளும் தெரிந்து விடும் எனக் கூற உடனே கண்ணம்மா ஊருக்கு தான் உபதேசமா நீங்க எப்போது டிஎன்ஏ டெஸ்ட் எடுப்பீங்க என கேட்கிறார். அதற்கு பாரதியும் கண்ணம்மா கேட்டது சரிதான் என யோசிக்கிறார் தன்னுடைய மகளான ஹேமா மற்றும் லட்சுமி இவருக்கும் டிஎன்ஏ டெஸ்ட் எடுக்கிறார்.
அந்த டெஸ்டில் பாரதி தான் அந்த குழந்தைகளின் அப்பா என தெரிய வருகிறது இதனால் இவ்வளவு நாளாக கண்ணம்மாவை சந்தேகப்பட்டு விட்டோமே என மனம் வருத்தத்தில் இருக்கிறார். பாரதி மேலும் அவரிடம் மன்னிப்பு கேட்டு கதறுகிறார். இதனை தெரிந்துக் கொண்ட வெண்பா உடனே பாரதி தான் என்னுடைய வயிற்றில் வளரும் குழந்தைக்கு அப்பா என கூறுகிறார்.
அந்த நேரத்தில் கண்ணம்மா தவறு செய்யாத எனக்கு தண்டனை கொடுத்து ஒதுக்கி விலக்கி வைத்தீர்களே இப்பொழுது நீங்கள் தவறு செய்கிறீர்கள் அதை இல்லை என்றும் மறுக்கிறீர்கள் எனவே நான் இவ்வளவு நாள் பட்ட கஷ்டத்தை இப்பொழுது நீங்களும் பட்டு புரிந்து கொள்ளுங்கள் என்று பாரதியை திட்டிவிட்டு கிளம்புகிறார். அதன் பிறகு வெண்பா கழுத்தில் தாலியை கட்டப் போகும் நேரத்தில் ரோகித் தடுத்து நிறுத்தி வெண்பாவின் வயிற்றில் வளரும் குழந்தைக்கு நான் தான் அப்பா என உண்மையை தெரியப்படுத்துகிறார்.
தோழியாக இருந்து கொண்டு எனக்கு துரோகம் செய்துவிட்டாய் என்று இவ்வளவு நாள் பாரதியின் வாழ்க்கை கெடுத்த வெண்பாவை பாரதி மிகவும் கடுமையாக திட்டுகிறார் இவ்வாறு பாரதி கண்ணம்மா கிளைமாக்ஸ் நோக்கி போய்க்கொண்டிருக்கும் நிலையில் தற்பொழுது விரைவில் டிஎன்ஏ டெஸ்ட் எடுத்த எபிசோடுகள் ஒளிபரப்பாக இருக்கிறது.