தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்றான பாரதி கண்ணம்மாவில் இன்று வெளியாக உள்ள எபிசோடில் வெண்பா புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறார் அப்பொழுது ரோஹித் வர பத்திரிக்கை தயாராகி விட்டதாக எடுத்து ஷர்மிளாவிடம் காமிக்க சூப்பர் என ஷர்மிளா கூறுகிறார். அப்பொழுது ரோகித்துக்கு ஒரு போன் வருகிறது ரோகித் பேசிக் கொண்டிருப்பதை சாந்தி ஒட்டு கேட்கிறார்.
பிறகு ரோகித் கிளம்பி செல்ல வெண்பாவும் சாந்தியும் அவனை பாலோ பண்ணி செல்கிறார்கள் இந்த நேரத்தில் ரோஹித் தன்னுடைய அம்மாவை சந்தித்து பேச அவர் கடங்காரர்கள் வீட்டை பூட்டி என்னை வெளியே தள்ளி விட்டாங்க என அழுவ இதை பார்க்க வெண்பா இதுதான் ரோஹித்தின் உண்மையான முகம் என்பதை தெரிந்து கொள்கிறார் இதனை வீடியோவாக எடுத்து கொள்கிறார்.
ஒருபுறம் பாரதி மருத்துவமனையில் இருக்க தன்னுடைய மனசாட்சி எதிரே தோன்றுகிறது கண்ணம்மா கேட்ட கேள்வியில் என்ன தப்பு இருக்கு நீயும் டிஎன்ஏ டெஸ்ட் எடுத்தா எல்லா பிரச்சனையும் முடிந்துவிடும் என சொல்ல நான் எதுக்கு எடுக்கணும் நான் ஏற்கனவே ரெண்டு டேஸ்ட் எடுத்து விட்டேன் கண்ணம்மா மேல நான் சந்தேகப்படல அவ தப்பு பண்ணி இருக்கான்னு உறுதியாக நம்புகிறேன் என்ன சொல்ல அவருடைய மனசாட்சி டிஎன்ஏ டெஸ்ட் எடுத்தா உண்மையான முடிவு தெரிஞ்சிடும் அதன் பிறகு எந்த ஒரு குற்ற உணர்ச்சியும் இல்லாமல் நீ போய் சந்தோஷமா வெண்பாக்கத்துல தாலியை கட்டலாம்.
ஒருவேளை லட்சுமி உனக்கு பிறந்த குழந்தை என உறுதி ஆயிடுச்சின்னா நீ செஞ்சது தப்பாயிடும் கண்ணம்மா கிட்ட வருத்தம் தெரிவிச்சு அவளோடு சேர்ந்து வாழு என சொல்ல ஒரு கட்டத்தில் பாரத டிஎன்ஏ டெஸ்ட் எடுப்பதற்கு ஒப்புக்கொள்கிறார் இந்த முடிவை வைத்து தான் என்ன நடக்கப் போகிறது என்பது இனி வரும் எபிசோடில் ஒளிபரப்பாக இருக்கிறது.
மேலும் பிறகு கண்ணம்மா பாரதி ரூமுக்கு வந்து அவங்களுக்கு டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க ஏற்பாடு பண்ணியாச்சு நீங்க எப்ப எடுக்க போறீங்க என கேட்க பாரதிக்கு பதில் சொல்ல முடியாமல் எழுந்து வெளியே செல்கிறார் இதோடு இன்றைய எபிசோட் முடிவடைகிறது.