ஊருக்கு தான் உபதேசம் நீங்க முதல்ல டிஎன்ஏ டெஸ்ட் எடுங்க என பாரதியை கழுவி ஊற்றிய கண்ணம்மா.!

bharathi-kannama-21
bharathi-kannama-21

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அந்த வகையில் தொடர்ந்து பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் தற்பொழுது வெண்பா ஒரு நாடகம் நடத்தி வரும் நிலையில் எப்படியாவது பாரதியை கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து வருகிறார்.

இதன் காரணமாக எந்த எல்லைக்கு வேணாலும் போகலாம் என்பதில் இருந்து வரும் இவர் தற்போது தன்னுடைய வயிற்றில் வளரும் குழந்தைக்கு அப்பா தேவை எனவே பாரதி தான் அந்த அப்பாவாக இருக்க வேண்டும் என்று உறுதி செய்துள்ளார் வெண்பா. இதனால் விஷம் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் பாரதி இரவு முழுவதும் அவர் உடனே இருந்து பார்த்து கொள்கிறார்.

பிறகு வெண்பா கண் விழித்த உடன் நான் மீண்டும் செத்துப் போகிறேன் என கூற பிறகு மனம் இறங்கி திருமணம் செய்து கொள்வதற்கு ஒற்றுக்கொள்கிறார் பாரதி. இதனால் மகிழ்ச்சியடைந்து பாரதியை கட்டிப்பிடித்துக் கொள்கிறார் வெண்பா. பிறகு பிரசவத்திற்காக ஒரு பெண் மருத்துவமனைக்கு வர அவருடைய கணவர் அந்த குழந்தை எனக்கு பிறக்கவே இல்லை என கத்தி கூச்சல் போடுகிறார் இதனைக் கேட்ட பாரதி இந்த பிரச்சனைக்கெல்லாம் ஒரே வழி தான் டிஎன்ஏ டெஸ்ட் எடுத்து தான் பார்க்கணும் என கூற முதலில் டிஎன்ஏ டெஸ்ட் எடுத்து உங்கள் பிள்ளை என பார்க்கலாம் என்று கூறுகிறார்.

இதனை பார்த்த கண்ணம்மா ஊருக்கு தான் உபதேசமா உங்களுக்கு சந்தேகம் இருந்தா நீங்க ஒரு டிஎன்ஏ டெஸ்ட் எடுத்து பார்க்க வேண்டியது தானே என கூறுகிறார். இதனை தனியாக உட்கார்ந்து யோசிக்கிறார் பாரதி பிறகு கண்ணம்மா சொல்வதும் சரிதான் என அவருடைய மனசாட்சி சொல்கிறது.

இதன் காரணமாக தற்பொழுது தனது மகாலட்சுமி என் டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க பார்க்க இருக்கிறார் இதன் மூலம் லட்சுமி பாரதியின் குழந்தை தான் என அவருக்கு தெரிய வருகிறது இப்படிப்பட்ட நிலையில் வெண்பா உடனடியாக திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கட்டாயப்படுத்தி வரும் நிலையில் பாரதி என்ன முடிவு எடுப்பார் என்ற எதிர்பார்ப்புடன் பாரதி கண்ணம்மா சீரியல் நகர்ந்து கொண்டிருக்கிறது.