விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பெரும்பாலான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் விமர்சனத்தை பெற்று வரும் சீரியல் தான் பாரதி கண்ணம்மா கடந்த சில வருடங்களாக பாரதி கண்ணம்மாவை ஏற்றுக்கொள்ளாமல் சந்தேகப்பட்டு வரும் நிலையில் இவர்கள் எப்பொழுது இணைவார்கள் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வந்தது.
இப்படிப்பட்ட நிலையில் சம்பந்தமே இல்லாத பல கதைகளை ஒன்று சேர்த்து சீரியலை ஒளிபரப்பி வரும் நிலையில் சமீபத்தில் பாரதி கண்ணம்மா பணியாற்றி வரும் மருத்துவமனையில் தீவிரவாதிகள் கைப்பற்றினார்கள் பிறகு பல போராட்டத்திற்குப் பிறகு அனைவரும் மருத்துவமனையில் இருந்து உயிருடன் தப்பித்தனர்.
எனவே அதன் பிறகு பாரதி கண்ணம்மாவின் மீது சிறிது நம்பிக்கையில் இருந்து வந்த நிலையில் தற்பொழுது திடீரென வெண்பா பாரதியை திருமணம் செய்து கொள்வதற்காக பல முயற்சிகளை செய்து வருகிறார். அதாவது வெண்பா ரோகித் இருக்கும் இடையே எதிர்பாராத விதமாக தப்பு நடந்த நிலையில் தற்போது வெண்பா கற்பமாக இருந்த வருகிறார்.
எனவே எப்படியாவது இதனை வைத்து பாரதியை மிரட்டி திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற முடிவில் இருந்து வந்த நிலையில் பாரதியை சந்தித்து பல பொய்களை சொல்லி இந்த குழந்தைகளுக்கு தந்தையாக இருக்க வேண்டுமெனவும் தாலி மட்டும் கட்டினால் போதும் நான் எங்கு வேண்டுமானாலும் சென்று பிழைத்துக் கொள்வேன் எனவும் கூறுகிறார்.
ஆனால் பாரதி எவனோ ஒருவன் குழந்தைக்கு நான் அப்பாவாக இருக்கிறதா என கூறிவிட்டு அங்கிருந்து செல்கிறார் உடனே வெண்பா விஷத்தை குடித்துவிட்டு பாரதிடம் போன் செய்து கூற பிறகு பாரதி வெண்பாவை மருத்துவமனையில் அனுமதித்து காப்பாற்றி விடுகிறார்.
பிறகு நான் என்னைக்கு ஒருநாள் சாக தான் போறேன் இப்பொழுது செத்து விடுகிறேன் என பாரதியிடம் வெண்பா கூற பிறகு வேறு வழியில்லாமல் பாரதி திருமணம் செய்து கொள்ள ஒத்துக் கொள்கிறார் பிறகு மகிழ்ச்சியில் வெண்பா பாரதியை கட்டி பிடித்து கொள்கிறார் இதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.