விஜய் டிவியில் தற்பொழுது கிளைமாக்ஸ் நோக்கி ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் பாரதி கண்ணம்மா. விரைவில் இந்த சீரியல் முடிய இருக்கும் நிலையில் எல்லாம் உண்மைகள் எப்படி தெரிய வருகிறது என்பதை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருகிறது. அதாவது தற்பொழுது பாரதி டிஎன்ஏ டெஸ்ட் ரிப்போர்ட் வர தாமதமாகி வரும் நிலையில் என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் இருந்து வருகிறார்.
ஏனென்றால் டெஸ்ட் ரிசல்ட் கண்ணம்மாவிற்கு சாதகமாக வந்து விட்டால் வெண்பாவை திருமணம் செய்து கொள்ள கூடாது என்பதில் உறுதியாக இருந்து வருகிறார். எனவே இந்த நிலையில் திருமண மண்டபத்தில் இருந்து வெண்பா தப்பித்து வந்த நிலையில் பாரதிக்கு போன் செய்து உடனே வர சொல்கிறார் வேறு வழி இல்லாமல் பாரதியும் வருவதாக சொல்லிவிடுகிறார்.
இதனை தொடர்ந்து ஒரு புறம் வெண்பாவை காணவில்லையே என அனைவரும் மண்டபத்தில் அதிர்ச்சி அடைகிறார்கள். அப்பொழுது நம்மளை சும்மா விட மாட்டாங்க என சந்தேகப்படக் கூடாது என்பதற்காக வெண்பாவின் வீட்டு வேலைக்காரி சாந்தி அதிகமாக அழுது கூச்சல் போடுகிறார். ஆனால் கண்ணம்மா இதனை நம்பாமல் கண்டிப்பாக இவளுக்கு எல்லா விஷயமும் தெரியும் என அருவமனையை அவரின் கழுத்தில் வைத்து கேட்கிறார்.
உடனே அனைவரும் அதிர்ச்சியடைய வெண்பாவின் வீட்டு வேலைக்காரி சாந்தியும் அரண்டு போய் விடுகிறார் பிறகு வெண்பாமா பாரதி ஐயாவை தான் கல்யாணம் பண்ணிக்க போகிறாங்க என உண்மையை கூறி விடுகிறார் இதனைக் கேட்டவுடன் கண்ணம்மா உள்ளிட்ட மண்டபத்தில் இருப்பவர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். உடனே அனைவரும் இந்த விஷயம் தெரிந்ததும் கோவிலுக்கு செல்கிறார்கள்.
அங்கு வெண்பாவை ஒருவழியாக கண்டுபிடித்து வச்சி செய்ய போகிறார். இவ்வாறு இந்த சண்டை வந்து கொண்டிருக்கும் பொழுது பாரதிக்கு டிஎன்ஏ டெஸ்ட் ரிப்போர்ட் வந்து விடுகிறது எனவே கண்ணம்மா ஒழுக்கமானவள் என தெரிந்து கொண்டதும் பாரதி வெண்பாவை திருமணம் செய்து கொள்ளாமல் கண்ணம்மாவை ஏற்றுக் கொள்கிறார். மாலையும் கழுத்துடன் இருக்கும் வெண்பா அதே இடத்தில் ரோகித் தாலியை கட்டி விடுகிறார்.