டிஎன்ஏ டெஸ்ட் மூலம் உண்மையை தெரிந்துக் கொண்ட பாரதி.! வெண்பா கழுத்தில் தாலி கட்டுவாரா.?

bharathi-kannama
bharathi-kannama

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் கிட்டத்தட்ட நான்கு வருடங்களாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் தற்போது இந்த சீரியல் கிளைமாக்ஸ் நோக்கிய மிகவும் விறுவிறுப்பான கதை அம்சத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது அப்படிப்பட்ட நிலையில் தற்போது வெண்பா ரோகித் இவர்களுடைய திருமண மிகவும் கோலாகலமாக மண்டபத்தில் நடைபெற இருக்கிறது.

இந்நிலையில் வெண்பா கர்பமாக இருக்கும் நிலையில் இதனை பாரதியிடம் கூறி தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என வற்புறுத்துகிறார் மேலும் தற்கொலை வரை வெண்பா சென்ற நிலையில் வேறு வழியில்லாமல் பாரதியும் வெண்பாவை திருமணம் செய்து கொள்ள ஒத்துக் கொள்கிறார். இதனைத் தொடர்ந்து டிஎன்ஏ டெஸ்டும் எடுத்துள்ளார் பாரதி.

இந்த ரிப்போர்ட்டில் ஹேமா மற்றும் லட்சுமி தன்னுடைய குழந்தைகள் என தெரிய வந்தால் கண்ணம்மாவிடம் மன்னிப்பு கேட்டு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து வருகிறார் பாரதி ஆனால் டெஸ்ட் ரிப்போர்ட் வர காலதாமதமாகி வரும் நிலையில் வெண்பா பாரதி திருமணம் செய்து கொள்வதற்காக மண்டபத்திலிருந்து யாருக்கும் தெரியாமல் ஓடி வருகிறார்.

வெண்பாவை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதற்காக பாரதியும் கோயிலுக்கு வருகிறார் அங்கு கடைசி நேரத்தில் டிஎன்ஏ டெஸ்ட் ரிப்போர்ட் வந்து ஹேமா, லட்சுமி இருவரும் தனக்கு பிறந்த பிள்ளைகள் என தெரிய வருகிறது இதனால் கனமாவிடம் மன்னிப்பு கேட்கிறார் மேலும் இத்தனை நாள் கண்ணம்மாவை தப்பாக புரிந்து கொண்டேன் என்று சொல்லிவிட்டு வெண்பா கழுத்தில் தாலி கட்ட பாரதி மறுக்கிறார்.

இவ்வாறு இத்தனை வருடங்களாக பாரதியை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என பல சதிகளை செய்து வந்த நிலையில் வெண்பா இதனை ஏற்றுக் கொள்ள முடியாமல் தற்கொலை செய்ய முயற்சிக்கிறார். ஆனால் கடைசி நேரத்தில் வெண்பா ரோகித்திற்கு திருமணம் நடைபெற்று விடுகிறது. இவ்வாறு இதோடு இந்த சீரியல் நிறைவடைகிறது.