இப்பொழுதே சக்காளத்தி சண்டையை ஆரம்பித்த கண்ணம்மா.! வெண்பாவிடம் அத்துமீறும் ரோஹித்..

bharathi-kannama-22
bharathi-kannama-22

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியலான பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பா தன்னுடைய அம்மா ஏற்படுத்தி செய்த கல்யாணத்திற்கு சம்மதம் தெரிவித்து விட்டு நல்லவள் போல் நடித்து வந்த நிலையில் தற்பொழுது மணமேடை வரை வந்திருக்கிறார் எனவே வெண்பா திருந்தி விட்டார் என குடும்பமே நம்பி வருகிறது.

ஆனால் கண்ணம்மா மட்டும் வெண்பாவை நம்பாமல் சந்தேகத்துடன் இருந்து வருகிறார் எனவே மண்டபத்தில் கல்யாணத்திற்கு ரெடியான மணப்பெண்ணான வெண்பாவை சந்தித்து கண்ணம்மா பேசுகிறார் அப்பொழுது இவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்படுகிறது அதாவது வெண்பாவிற்கு பார்த்து வைத்திருக்கும் மாப்பிள்ளை ரோஹித் தன்னுடைய வருங்கால மனைவியை பார்த்து அழகில் வியந்து முத்தம் கொடுக்க பார்க்கிறார்.

இதனால் அலறி அடித்து ஓடுகிறார் வெண்பா மேலும் பாரதிக்கு உடனே போன் மூலம் தொடர்பு கொள்கிறார் அப்பொழுது மிகப்பெரிய டிராமா நடத்துகிறார் ஆனால் பாரதி டிஎன்ஏ டெஸ்ட் ரிப்போர்ட் எப்பொழுது வரும் என காத்திருக்கிறார் ரிசல்ட் பார்த்து விட்டு தான் வெண்பாவை திருமணம் செய்து கொள்ளலாமா வேண்டாமா என முடிவு செய்ய வேண்டும் எனவும் நினைக்கிறார்.

கண்ணம்மாவின் மீது எந்த தப்பும் இல்லை என்றும் அவருடைய இரண்டு மகள்களும் பாரதிக்கு பிறந்தது தான் என விரைவில் தெரிய வரப்போகிறது. மேலும் வெண்பா இந்த நேரத்தில் என்னுடைய வயிற்றில் வளரும் குழந்தைக்கு பாரதி தான் காரணம் எனவும் புதிய பிரச்சனையை கிளப்ப இருக்கிறார். எனவே இதனை தெரிந்து கொண்ட ரோகித் வெண்பா செய்த அனைத்து கோல்மால் வேலைகளையும் அனைவருக்கும் தெரிய வைக்க போகிறார்.

இவ்வாறு இந்த சீரியல் கிளைமாக்ஸ் காட்சியை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறது இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது வெண்பா தன்னுடைய ரூமில் இருந்து ஜன்னல் வழியாக புடவையைக் கட்டி இறங்கி தப்பித்து ஓடி உள்ளார் இதனை தெரிந்து கொண்ட குடும்பத்தினர்கள் அதிர்ச்சியில் உள்ளார்கள்.