மண்டபத்தில் இருந்து தப்பித்த வெண்பா.! டிஎன்ஏ டெஸ்ட் முடிவை தெரிந்துக் கொண்ட பாரதி..

bharathikannama
bharathikannama

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல்களில் ஒன்றுதான் பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் தற்போது கிளைமாக்ஸ் நோக்கி ஒளிபரப்பாகி வரும் நிலையில் இன்னும் சில வாரங்களில் முடியை இருக்கிறது இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது வெண்பா பாரதியை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற முடிவில் பல முயற்சிகளை செய்து வந்தவர் மேலும் தற்பொழுது பாரதியின் மனதை மாற்றிய திருமணத்திற்கும் சம்பந்தம் வாங்கிக் கொண்டார்.

இருவரும் நேற்று திருமணத்திற்கான புடவைகள் போன்ற தேவையான பொருட்களை வாங்கினார்கள் இந்த நேரத்தில் பாரதி டிஎன்ஏ டெஸ்ட் ரிப்போர்ட் எப்பொழுது வரும் என்பதில் ஆர்வமாக காத்து வருகிறார். மேலும் இதனை வெண்பாவிடம் சொல்லாமல் இருந்து வரும் நிலையில் வெண்பா தன்னுடைய அம்மா சொல்லும் அனைத்தையும் கேட்கிறார்.

இந்நிலையில் இன்றைய எபிசோடில் வெண்பா மற்றும் ரோகித் இருவருக்கும் மிகவும் கோலாகலமாக திருமண ஏற்பாடுகள் மண்டபத்தில் நடைபெற்று வருகிறது வெண்பாவம் மிகவும் மகிழ்ச்சியாக கிளம்பும் நிலையில் ஒரு கட்டத்திற்கு பிறகு அனைவருக்கும் சந்தேகம் ஏற்படுகிறது இதனால் வெண்பா இருக்கும் ரூமிற்கு அனைவரும் செல்கிறார்கள்.

அங்கு வெண்பாவை காணும் இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைய பிறகு வெண்பா ஜன்னல் வழியாக புடவையைக் கட்டி இறங்கி தப்பித்து ஓடியது தெரிய வருகிறது மேலும் பாரதியும் வெண்பாகும் கோவிலுக்கு செல்ல வெண்பா மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார். பாரதி என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டு இருக்கிறார் இருவரும் மாலையும் கழுத்துடன் சாமி முன்பு நிற்கிறார்கள் அப்பொழுது வெண்பா தாலியை கட்டு பாரதி எனக் கூறுகிறார்.

மேலும் எமோஷனலாகவும் பேச பிறகு பாரதிக்கு மருத்துவமனையிலிருந்து போன் வருகிறது அதில் டிஎன்ஏ டெஸ்ட் ரிப்போர்ட் வந்து விட்டதாக கூற பாரதி பதற்றத்துடன் அதனைப் பற்றி கேட்கிறார் இதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது எனவே அடுத்த எபிசோடில் லட்சுமி, ஹேமா இருவரும் தன்னுடைய மகள்கள் என தெரிந்து கொண்டு பாரதி வெண்பாவை  திருமணம் செய்துக் கொள்ள மாட்டார்.