வெண்பாவை சந்தேகப்படும் ஷர்மிளா.! பதட்டத்தில் பாரதி..

bharathi-kannama-2
bharathi-kannama-2

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் இன்றைய எபிசோடில் வெண்பா மற்றும் பாரதி என இருவரும் ஷாப்பிங் சென்று இருக்க அப்பொழுது இருவரும் பேசிக் கொண்டிருக்கும் பொழுது திடீரென டிஎன்ஏ டெஸ்ட் கிளினிக்கில் இருந்து போன் வர இதனைப் பார்த்து வெண்பா அதிர்ச்சி அடைகிறார்.

பிறகு பாரதியிடம் என்ன விஷயம் என கேட்க ஹாஸ்பிடலில் ஒருவருக்கு குழந்தை பிறந்தது என உண்மையை சொல்லாமல் மாற்றி கூறுகிறார். மேலும் வெண்பா பாரதியிடம் நம்ப சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்க வேண்டும் அந்த நாளுக்காக வெயிட் பண்ணிக்கொண்டு இருக்கிறேன் என மிகவும் பாசமாக பேசுகிறார்.

அதன் பிறகு வெண்பா காரில் இருந்து இறங்கி வீட்டுக்கு சென்று விட பாரதி போன் போட்டு விஷயம் கேட்க மாலை 5 மணிக்கு ரிசல்ட் வந்து விடும் என மருத்துவர் கூறுகிறார் வந்தவுடன் போன் பண்ணுமாறு சொல்லி போனை வைக்கிறார். இதனை தொடர்ந்து ஷார்மளா‌ கண்ணம்மா வீட்டிற்கு பத்திரிக்கை வைக்க வந்திருக்க அப்பொழுது வெண்பாவில் நடத்தையில் எனக்கு சந்தேகம் இருப்பதாக கூறுகிறார்.

எதையும் இவ்வளவு சீக்கிரம் விட்டுக் கொடுக்கிற பொண்ணு கிடையாது கொஞ்சமா அவ மேல ஒரு கண்ணு வச்சுக்கோங்க என சொல்ல ஷர்மிளாவும் வெண்பாவின் மீது சந்தேகம் படுகிறார் பிறகு ரோகித் தன்னுடைய அம்மாவை அழைத்துக் கொண்டு ஷர்மிளாவின் வீட்டிற்கு வர அப்போது வெண்பா ஜூஸ் எடுத்துட்டு வந்து அனைவருக்கும் கொடுக்கிறார்.

மேலும் மாமியார் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க ஷர்மிளாவிற்கு இன்னும் சந்தேகம் அதிகரிக்கிறது உடனே ஷர்மிளா வெண்பாவின் ரூமிற்கு சென்று நீ ஏதும் பிளான் பண்றியா என கேட்க வெண்பா நான் உனக்காக என்னையே மாற்றிக் கொண்டே இருக்கிறேன் என அழுது டிராமா போட ஷர்மிளா சாரி கேட்டுவிட்டு செல்கிறார் இதோடு பாரதி கண்ணம்மா சீரியல் நிறைவடைகிறது.