விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அந்த வகையில் தற்பொழுது கிளைமாக்ஸ் நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் தான் பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் மிகவும் கேவலமான கதைவுடன் ஒளிபரப்பாகி வருவதால் ரசிகர்கள் எப்பொழுது இந்த சீரியல் முடியும் என எதிர்பார்த்து வருகிறார்கள். இதனால் எரிச்சல் அடைந்து உள்ளார்கள்.
அதாவது குழந்தை பெற்றுக்கொண்டு பிரிந்து ஒன்பது வருடங்கள் ஆகும் நிலையில் டாக்டராக இருந்து கொண்டு இதுவரையிலும் ஒரு டிஎன்ஏ டெஸ்ட் கூட எடுக்காமல் இருந்து வருகிறார் பாரதி. தன்னுடைய வளர்ப்பு மகள் என நினைத்து வரும் பாரதி தன்னுடைய கல்லூரி காதலி ஹேமாவின் புகைப்படத்தை இதுதான் உனது அம்மா என தன்னுடைய மகளிடம் காட்டுகிறார்.
ஹேமா இது தன்னுடைய அம்மா இல்லை என்பதை தெரிந்து கொள்கிறார் எனவே பாரதியிடம் தொடர்ந்து பல கேள்விகள் கேட்டேன் நச்சரிக்கிறார். ஒரு கட்டத்திற்கு பிறகு பாரதி கடைசியில் அனாதை ஆசிரமத்தில் இருந்து உன்னை எடுத்துட்டு வந்தார்கள் உன்னுடைய அப்பா அம்மா யார் என தெரியாது உங்க பாட்டி தான் உன்னை எடுத்துட்டு வந்தாங்க என கூற ஹேமா நான் அனாதையா என கூறிவிட்டு மயக்கம் போட்டு விழுகிறார்.
அதன் பிறகு ஹேமா சரியான நிலையில் பாரதி அழுகிறார் மேலும் உனக்கு அப்பா நான் எடுக்கிறேன் என ஆதரவு கூட இதையெல்லாம் பார்த்த சௌந்தர்யா தன்னுடைய மருமகள் கண்ணம்மாவிடம் போன் போட்டு கூறுகிறார். ஆத்திரமடைந்த கண்ணம்மா நான் பத்து மாதம் சுமந்து பெற்ற என்னுடைய மகளை அவர் அனாதை என கூறுவது என்னால் ஜீரணிக்க முடியவில்லை இப்பொழுது நான் அங்கு வந்து எல்லா உண்மையும் சொல்ல நினைக்கிறேன் என கூறிவிட்டு கதறி அழுகிறார்.
இதனால் சௌந்தர்யா கண்ணம்மாவை சமாதானப்படுத்துகிறார். இவ்வாறு தொடர்ந்து ஹேமாவும் பாரதியிடம் பேசிக் கொண்டிருக்கும் நிலையில் டிஎன்ஏ டெஸ்ட் ரிப்போர்ட்டில் மட்டும் லட்சுமியும், ஹேமா தன்னுடைய மகள்கள் என தெரிய வந்தால் வெண்பாவை திருமணம் செய்து கொள்ள கூடாது என நினைக்கிறார்.