விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் இன்றைய எபிசோடில் ஹேமா பாரதியின் காதலி ஹேமாவின் அம்மாவை பார்த்த நிலையில் போனின் மூலம் பாரதியிடம் பேசுகிறார் அப்பொழுது என்னுடைய பொண்ணுக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம் என கேட்க அதற்கு பாரதி நானும் ஹேமாவும் ஒன்றாக படித்தோம்.
அவள் என்னுடைய நெருங்கிய தோழி என கூறிவிட்டு பிறகு மத்ததை எல்லாம் நேரில் பேசிக்கலாம் என சொல்லி விடுகிறார். உடனே இதனை கேட்டு அதிர்ச்சடைந்த ஹேமா என்கிட்ட பொய் சொன்னீங்க டாடி நீங்க ரீல் டாடி என்கிட்ட நிறைய பொய் சொல்லி இருக்கீங்க என்ன கத்த பாரதியால் சமாதானப்படுத்த முடியவில்லை.
பிறகு வீட்டில் இருப்பவர்களை அனைவரையும் பார்த்து டாடி சொன்னது பொய் என உங்களுக்கு எல்லோருக்கும் தெரியும் தானே.? அப்ப நான் எல்லோரும் என்கிட்ட பொய் சொல்லி இருக்கீங்க இனிமே நான் என்னுடைய அம்மாவை தேடி கண்டுபிடித்து இருக்கிறேன் எனக் கூறிய அம்மா வீட்டை விட்டு வெளியே ஓடுகிறார் உடனே பாரதி ஹேமாவை தடுத்து நிறுத்துகிறார்.
மிகவும் கோபப்படுவதால் உடனே பாரதி உன்னுடைய அம்மா எனக்கு யாருன்னு தெரியாது எனக் கூற ஹேமா அதிர்ச்சி அடைகிறார். எனக்கு உங்க அம்மா யாருன்னு தெரிஞ்சா தானே சொல்ல முடியும் எனக்கூறி பாரதி அழுக பிறகு ஹேமா என்ன சொல்றீங்க டாடி எனக் கூற அதற்கு பாரதி உன்னுடைய அம்மா யாருன்னு எனக்கு தெரியாது நான் உனக்கு அப்பாவும் இல்லை நீ எனக்கு பொறந்த பொண்ணும் இல்லை நீ ஒரு அனாதை உங்க பாட்டி தான் உன்னை அனாதை ஆசிரமத்தில் இருந்து எடுத்துட்டு வந்தார்.
அப்பொழுது இருந்து இப்பொழுது வரையிலும் நீ என்னுடைய பொண்ணு என நினைத்து வளர்த்து வருகிறேன் என கூறுகிறார். இதனை தொடர்ந்து மறுபுறம் வெண்பா ரோகித்துடன் இணைந்து விதவிதமாக போட்டோ சூட் எடுத்துக் கொள்கிறார் இதனைப் பார்த்த சாந்தி குழப்பமடைகிறார் மேலும் தொடர்ந்து ஃபோட்டோ ஷூட் நடைபெற்று வரும் நிலையில் வெண்பாவின் மாற்றத்தை பார்த்து மகிழ்ச்சியடைகிறார் ஷர்மிளா.