பாரதியை விடாமல் கேள்வி கேட்கும் ஹேமா.! கண்ணம்மாவிடம் பம்பும் வெண்பா..

bharathi-kannama-1
bharathi-kannama-1

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல்களில் ஒன்றான பாரதி கண்ணம்மா சீரியலில் இப்பொழுது ரசிகர்களை பைத்தியமாக்கும் அளவிற்கு தொடர்ந்து பல எபிசோடுகளை ஒளிபரப்பி வருகிறார்கள் அதாவது பாரதி டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க முடிவு செய் இந்த நிலையில் டெஸ்டின் முடிவு வரத்திற்குள் பாரதியை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என வெண்பா நினைக்கிறார்.

ஒரு புறம் ரோகித் பணக்காரன் என்னை ஏமாற்றியதால் இதற்கு மேல் இவர் ரோகித் வெண்பாவின் திருமணம் நடக்காது என ஷர்மிளா கூறி வந்தார். இவர் திடீரென்று ரோகித் தங்கி இருக்கும் இடத்திற்கே சென்று ரோகித்திடம் பேசுகிறார் பேசியுள்ளார் ஷர்மிளா. பிறகு ரோகித் தன்னுடைய மகளை உண்மையாக காதலித்ததாக ஷர்மிளா நம்புகிறார்.

மேலும் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க பத்திரிகையை அடித்து அதனை பாரதி குடும்பத்தினரிடம் கொடுப்பதற்காக சென்றிருக்கிறார். இவ்வாறு வெண்பா தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதற்காக பாரதியிடம் சத்தியம் வாங்கி இருக்கும் நிலையில் இந்த பத்திரிகையை பார்த்தவுடன் பாரதி அதிர்ச்சி அடைகிறார் மேலும் வெண்பா கண்ணம்மாவிடம் தன்னுடைய பத்திரிக்கையை கொடுத்து அப்படியே நிற்கிறார்.

இவ்வாறு தொடர்ந்து மாறி மாறி எபிசோடுகள் ஒளிபரப்பாகி வருவதால் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் கடுப்பை சம்பாதித்து வருகிறது இந்த சீரியல். எனவே ரசிகர்கள் எங்களையெல்லாம் பார்த்தால் உங்களுக்கு பைத்தியக்காரவங்க மாதிரி தெரியுதா எனவும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து மறுபுறம் பாரதி தன்னுடைய மகளிடம் இதுதான் உன்னுடைய அம்மா என கூறி புகைப்படம் ஒன்றை கொடுத்து இருந்தார்.

அது பாரதியின் கல்லூரி காதலி பிறகு பாரதியின் கல்லூரி காதலி இறந்துவிட்டதாகவும் ஹேமாவின் உண்மையான அம்மா இவர் இல்லை என்ன என்ற உண்மையையும் ஹேமா தெரிந்து கொள்கிறார் எனவே தன்னுடைய அப்பா தன்னிடம் பொய் சொல்லி விட்டதாக வருத்தமடைகிறார் ஹேமா. எனவே பாரதியை சந்தித்த ஹேமா தன்னுடைய அம்மா யார் என கேட்க பாரதி சில நாட்களில் உண்மையான உன்னுடைய அம்மாவை கூறுகிறேன் என வாக்கு கொடுத்திருக்கிறார்.