விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் தொடர்ந்து ஒரே கதையை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்பொழுது கிளைமாக்ஸ் நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் 10 வருடங்களாக தன்னுடைய மனைவி மற்றும் குழந்தையை பற்றி தெரிந்து கொள்ளாமல் பாரதிய அனைவரையும் ஒதுக்கி வைத்து வருகிறார்.
எனவே தற்பொழுது பாரதி டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க முடிவு செய்திருக்கிறார். மேலும் உண்மைகள் தெரிய வருவது போல் இருந்தாலும் அதில் ஏதாவது ஒரு ட்விஸ்ட் வைத்து விடுகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் பாரதி தன்னுடைய மகள் ஹேமாவிடம் கல்லூரி காதலியின் புகைப்படத்தை காமித்து இவர்தான் உன்னுடைய அம்மா என பொய் சொல்லி இருந்தார் இதையும் நம்பி ஹேமா தந்த புகைப்படத்தை தன்னுடைய அம்மாவாக நினைத்துக் கொண்டு தன்னுடைய மனதில் இருப்பதை பேசி வந்தார்.
இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது ஹேமாவிற்கு அந்த புகைப்படத்தில் இருப்பதை தன்னுடைய அம்மா இல்லை என்பது தெரிய வந்திருக்கிறது அதாவது சமீபத்தில் பாரதி காதலித்த பெண்ணின் அம்மா ரோட்டில் மயக்கம் போட்டு விட பிறகு அவர் தன்னுடைய மகளைப் பற்றி சொல்கிறார் எனவே அவரை தன்னுடைய அப்பா முன்பு நிறுத்துகிறார்.
இதனை வைத்து இத்தனை நாளாக பாரதி சொன்ன பொய்யை நிரூபித்து விடுகிறார் ஹேமா. பிறகு தன்னுடைய மகளை சமாதானப்படுத்துவதற்காக பாரதி மன்னிப்பு கேட்கிறார் ஒரு சில நாட்கள் மட்டுமே அவகாசம் கொடுக்கும்படி அதன் பிறகு ஹேமாவின் உண்மையான அம்மா யார் என சொல்கிறீர்கள் என்று அவருக்கு வாக்கு கொடுக்கிறார் பாரதி. மேலும் ஹேமாவும் தன்னுடைய அம்மாவை பற்றி இன்னும் சில நாட்களில் தெரிந்து விடும் என மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்.
இவ்வாறு பாரதி டிஎன்ஏ டெஸ்ட் எடுத்து அதன் பிறகு ஹேமா லக்ஷ்மி தன்னுடைய மகள் தான் கண்ணம்மா எந்த தப்பும் செய்யவில்லை என்றும் இத்தனை நாட்களாக கண்ணம்மாவை சந்தேகப்பட்டு வந்ததால் வருத்தமடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு பாரதி கண்ணம்மா சீரியல் முடிந்தவுடன் இந்த சீரியலின் இரண்டாம் பாகமும் விரைவில் துவங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.