தன்னுடைய அப்பாவை வெறுக்கும் ஹேமா.! பாரதிக்கு வெண்பா கொடுத்த அதிர்ச்சி..

bharathi-kannama
bharathi-kannama

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் எதிர்பாராத பல திருப்பங்களுடன் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் ஹேமாவிடம் அந்த பாட்டி பொண்ணுக்கு கல்யாணமாகி இருந்தா இப்பொழுது உன் வயதில் ஒரு பேத்தி இருந்திருக்கும் என கூற உங்க பொண்ணுக்கு கல்யாணமாகி ஒரு பெண் குழந்தை இல்லையா என ஹேமா கேட்கிறார்.

நீ என்ன சொல்ற என் பொண்ணு மாதிரி வேற யாரையோ பார்த்துட்டு பேசிட்டு இருக்கு அவளுக்கு கல்யாணமே ஆகலை அதுக்குள்ள அந்த எமன் அவளை கூட்டிட்டு போய்ட்டான் என சொல்கிறார் அப்பொழுது பாரதி ஹேமாவிடம் பொய் சொன்னது தெரிய வருகிறது. அதன்பிறகு ஹேமா வீட்டிற்கு செல்ல சமையல் அம்மா வீட்டிற்கு வந்துவிட லட்சுமி ஹேமாவை பார்த்து உள்ளே கூட்டிட்டு செல்ல நான் இன்னைக்கு இங்கேயே இருக்கிறேன் நீங்க பாட்டி கிட்ட சொல்லிடுங்க சமையல் அம்மா என கூற கண்ணம்மாவிடம் என்ற பிறகு சரி என்ன சொல்லி விடுகிறார்.

பிறகு பொய் சொல்றவங்க நல்லவங்களா கெட்டவங்களா என ஹேமா கேட்க கண்ணம்மா எதுக்கு பொய் சொல்றாங்க என்பதை பொறுத்து தான் அது முடிவு செய்ய வேண்டும் என சொல்ல லட்சுமி பொய் சொல்றது யாராக இருந்தாலும் கெட்டவங்க தான் என சொல்கிறார். பிறகு பாரதி வீட்டிற்கு வர ஹேமா இல்லாததை பார்த்து சௌந்தர்யாவுக்கு போன் போட்டு கண்ணம்மா எதுக்கு அவளை வீட்டுக்கு கூட்டிட்டு போனா எனது திட்டுகிறான்.

பிறகு நடந்தது என்னன்னு புரியாம பேசாத ஹேமா தான் திரும்பவும் கண்ணம்மா வீட்டுக்கு போய் இங்கேயே இருக்கணும் என சொல்லி இருக்கா அதுல கண்ணம்மா மேல என்ன தப்பு கிடையாது என கூறுகிறார். அடுத்தது வெண்பா பாரதிக்கு போன் போட்டு டார்லிங் என வெறுப்பேற்றுகிறார் மேலும் ஐயரை போய் பார்த்ததாகவும் ரோகித்துக்கும் எனக்கும் திருமணம் செய்ய நிச்சயக்கப்பட்ட தேதியிலேயே கல்யாணத்தை வச்சுக்கலாம் என சொன்னதாகவும் கூறுகிறார்.

கல்யாணத்துக்கு இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு உனக்கு ஓகே தானே என பாரதியிடம் கேட்கிறார் பாரதியும் என்ன சொல்வதென்று தெரியாமல் சரி என சொல்கிறார் அடுத்ததாக ஹேமா கண்ணம்மாவிடம் அப்பா எனக்கு பர்த்டே பார்ட்டியில் கொடுத்த அந்த போட்டோவை பார்க்கும் பொழுது எனக்கு ஒரு அம்மா என்ற ஈர்ப்பு வரவில்லை என சொல்கிறார்

பிறகு கண்ணாமாவும் தன் மனதிற்குள்ளேயே நான்தான் உன் அம்மா என சொல்லி உன்னை கட்டி பிடிக்கனும் போல இருக்கு ஆனால் சொல்ல முடியவில்லை எனக்கு கண்கலங்குகிறார். மேலும் ஹேமாவும் சமையல் அம்மாவை என்னுடைய அம்மாவாக இருந்திருக்கலாம் எனவும் நினைத்து பார்க்கிறார் இதோடு பாரதி கண்ணம்மா சீரியல் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.