விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் தற்போது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் ரோஹித் வெண்பா வீட்டிற்கு வந்து கதவைத் தட்ட கதவை திறக்கும் ஷர்மிளா நான் உன்னை எவ்வளவு நம்பினேன்.
ஆனால் நீ என்ன ஏமாத்திட்ட நீ ஒரு ஏழை குடும்பத்தை சேர்ந்தவன் என்ற சொல்லியிருந்தா கூட என் பொண்ணு உனக்கு கட்டி வைத்திருப்பேன் ஆனா நீ இவ்ளோ பெரிய பொய் சொல்லி என்னை ஏமாற்றி இருக்க இனிமேல் என் முகத்திலே முழிக்காக என கூறி விடுகிறார் பிறகு கண்ணம்மா லட்சுமியும் பேசிக் கொண்டிருக்கும்பொழுது குடுகுடுப்புக்காரர் நல்ல காலம் பிறக்குது நல்ல காலம் பிறக்குது என கண்ணம்மாவிற்கு நல்ல வாக்கு சொல்கிறார்.
பிரிந்திருந்த குடும்பம் ஒன்று சேரப் போவதாக சொல்லி அரிசி தானம் செய்ய கேட்க கண்ணம்மா அரிசி எடுத்துக் கொடுக்கிறார் நான் சொன்னது அத்தனையும் கண்டிப்பாக நடக்கும் என வாக்கு கொடுக்கிறார் மறுநாள் பாரதியின் அப்பா வேணும் காரில் வெளியே சென்று இருக்கும்பொழுது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்படுகிறது.
மேலும் மயங்கி விட அப்பொழுது அந்த வழியாக வெண்பா வந்து இதை பார்க்க அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு பாரதிக்கு தெரிவிக்கிறார். பாரதி வீட்டில் இதனைப் பற்றி சொல்ல அனைவரும் பதட்டமடைகிறார்கள் மேலும் ஹார்ட் அட்டாக் தான் பயப்பட வேண்டாம் சொன்னதை கேட்டவுடன் நிம்மதி அடைகின்றனர்.
வெண்பா தான் அவரை சரியான நேரத்தில் கொண்டு வந்து சேர்த்ததாக டாக்டர் சொல்ல பாரதியின் நன்றி கூறுகிறார் சௌந்தர்யா தேம்பி தேம்பி அழ கண்ணம்மா ஆறுதல் கூறுகிறார் பிறகு நிறைய பேருக்கு கெட்டது நினைக்கிற அவளே நல்லா இருக்கும்பொழுது நமக்கு ஒன்றும் ஆகாது என கண்ணம்மா சொல்ல வெண்பா தன்னை தான் சொல்கிறார் என்பதை புரிந்து கொள்கிறார்.
உடனே வெண்பா நான் தான் அந்த நேரத்தில் சரியாக வந்து அங்கிளை காப்பாற்றினேன் இல்லை என்றால் அவருடைய நிலைமை என்ன ஆயிருக்கும் இந்த நேரம் ஏதாவது கெட்டது நடந்திருக்கும் என சொல்ல சௌந்தர்யா திட்டுகிறார் பிறகு எல்லோரும் சென்று வேணுவை பார்க்க அவர் மயக்கத்தில் இருக்கிறார் இதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.