விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் இத்தனை நாட்களாக சஸ்பென்சாக இருந்து வந்த தகவல் தற்பொழுது வெட்ட வெளிச்சமாகியுள்ளது அதாவது தன்னுடைய இரண்டு மகளும் எனக்கு பிறக்கவில்லை என சந்தேகத்தில் இருந்து வந்த டாக்டர் பாரதி தற்போது தான் டிஎன்ஏ டெஸ்ட் எடுத்து பார்க்கலாம் என்ற முடிவிற்கு வந்துள்ளார்.
இதன் காரணமாக தன்னுடைய இரண்டு மகள்களையும் லட்சுமி, ஹேமா இருவரையும் மருத்துவமனைக்கு பரிசோதனை செய்வதற்காக அழைத்து செல்கிறார் மேலும் அவர்களது ரத்த மாதிரியே தன்னுடைய ரத்த மாதிரி உடன் ஒப்பிட்டு பார்த்து அவர்கள் தனக்கு பிறந்தவர்களா என்பதை தெரிந்து கொள்ள போகிறார் இந்நிலையில் ஒருபுறம் வெண்பா எப்படியாவது பாரதியை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதற்காக தற்பொழுது அவருடைய வயிற்றில் வளரும் ரோஹித்தின் குழந்தையை பாரதி குழந்தை என நம்ப வைப்பதற்காக பல முயற்சிகளை செய்து வருகிறார்.
மேலும் ரோகித் ஜமீன் பரம்பரை என பொய் சொல்லி வந்த நிலையில் வெண்பா ரோஹித் எப்படிப்பட்டவன் என்பதை தன்னுடைய அம்மாவிடம் காண்பித்து தற்பொழுது கல்யாணத்தை நிறுத்தப் போவதாகவும் முடிவு செய்துள்ளார் மேலும் இந்த சந்தோஷத்தில் வெண்பா பாரதிக்கு போன் போட்டு மிகவும் மகிழ்ச்சியாக பேசிக் கொண்டிருக்கிறார்.இவ்வாறு வெண்பா போட்ட ஆட்டத்தை பார்த்த கோபியின் மகள் ஹேமா போனை வாங்கி கண்டபடி திட்டி விடுகிறார். மேலும் பாரதியும் ஹேமாவின் பேச்சைக் கேட்டு உடனே வெண்பாவின் நம்பர்களை பிளாக் செய்கிறார்.
இவ்வாறு வெண்பா ஓவராக சீன் போட இனி வரும் எபிசோடில் பாரதிக்கு டிஎன்ஏ டெஸ்ட் மூலம் லட்சுமி, ஹேமா இருவரும் தனக்கு பிறந்த குழந்தைகள் தான் என்ற உண்மை தெரிய வரப்போகிறது மேலும் கண்ணம்மாவிடம் மன்னிப்பு கேட்க பாரதிக்கு சங்கடமாக இருக்கிறது இவ்வாறு பாரதி கண்ணம்மா சீரியல் கிளைமாக்ஸ் நோக்கி போய்க்கொண்டிருக்கும் நிலையில் இன்னும் சில வாரங்களில் முடிக்க இருக்கிறார்கள்.