தமிழ் சின்னத்துரைகள் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றாக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அந்த வகையில் தொடர்ந்து மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாரதி கண்ணம்மா.
இந்த சீரியல் தற்போது கிளைமாக்ஸ் நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் ரோஹித் தனது மாமியாரிடம் கல்யாண பத்திரிக்கை ரெடியாகிவிட்டதாக கூறுகிறார் பிறகு ரோகித்துக்கு ஃபோன் வர அவர் பேசுவதை சாந்தி ஒட்டு கேட்கிறார் பிறகு ரோகித்தை பின்தொடர்ந்து வெண்பா செல்கிறார். அங்கு ரோஹித் அம்மா கடன்காரன் பிரச்சனையினால் தவித்துக் கொண்டிருப்பது பற்றி பேசுவதனை வீடியோ எடுத்து தனது அம்மா ஷாமிலிக்கு அனுப்புகிறார் வெண்பா.
பிறகு வெண்பாவின் அம்மா ரோகித்தை லெப்ட் அண்ட் ரைட் வாங்க எங்களை இத்தனை நாளாக ஏமாற்றி இருக்க உனக்கு என் பொண்ணு கேக்குதா என ஷர்மிளா திட்டுகிறார். இதனை பார்த்த வெண்பா ரோஹித் இனிமே நாம வழிக்கு வரமாட்டேன் என்று நினைக்க பிறகு பாரதியை கல்யாணம் பண்ணிக்கலாம் என்று யோசிக்கிறார். மறுபுறம் வெண்பாவின் அறிவுரையின்படி பாரத டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க மருத்துவமனைக்கு செல்கிறார் இத்தனை வருடம் கழித்து திடீரென பாரதி இவ்வாறு மாறியது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.
மேலும் வெண்பா பாரதிக்கு போன் செய்து நாம் சீக்கிரம் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறுகிறார் இதனைக் கேட்ட பாரதி விரைவில் முக்கிய முடிவு ஒன்று எடுக்க உள்ளார். அதாவது லட்சுமி தனக்கு பிறந்த குழந்தை இல்லை என்று தெரியாமல் வெண்பாவை திருமணம் செய்து கொள்ளப் போகிறார். ஆனால் டிஎன்ஏ டெஸ்டில் லட்சுமி தான் தன்னுடைய மகள் என தெரிய வர இருக்கிறது.
மேலும் ஹேமா ஒரு வீட்டிற்கு செல்கிறார் அங்கு எனது அம்மா என்று பாரதி கொடுத்த போட்டோ ஒன்று இருக்கு மாலை போடுகிறார்கள் இதனை பார்த்தவுடன் அதிர்ச்சடைகிறார் ஹேமா. மேலும் அங்கு இருப்பவர்கள் என் பொண்ணு உயிரோட இருந்திருந்தால் கல்யாணமாகி இருக்கும் முன்ன மாதிரி ஒரு பொண்ணு இருந்திருக்கும் என கூறுகிறார்கள்.
அப்பொழுது ஹேமா இவங்கள தானே நம்ம அம்மா என்று அப்பா போட்டோ கொடுத்தாரு என ஹேமா யோசிக்கிற மேலும் பிறகு டிஎன்ஏ டெஸ்ட் முடிவில் பாரதியின் குழந்தை லட்சுமி தான் என தெரியவர இருக்கிறது எனவே பாரதி என்ன செய்வது என்று தெரியாமல் திண்டாட இருக்கிறார் இதுதான் இனிவரும் எபிசோடுகளில் ஒளிபரப்பாக இருக்கிறது.