பாரதி கண்ணம்மாவுடன் சேர்ந்ததும் வெண்பா எடுக்கும் அவதாரம்.! இது என்ன புதிய டுவிஸ்ட்டா இருக்கு..

bharathi-kannama-1
bharathi-kannama-1

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல்களில் ஒன்றான பாரதி கண்ணம்மா சீரியலில் தற்பொழுது கிளைமாக்ஸ் நோக்கி ஒளிபரப்பாகி வருகிறது இந்த சீரியல் ஆரம்பமான காலகட்டத்தில் மிகவும் சுவாரசியமாக ஒளிபரப்பாகி வந்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்றது ஒரு வருடமாக ஒரே கதையை மையமாக வைத்து ஜவ்வு போல் இழுத்து வந்ததால் இந்த சீரியலை எப்பொழுது முடிப்பீங்க என ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது பாரதிக்கு தன்னுடைய மகள்கள் தான் லட்சுமி, ஹேமா என்பது தெரிய வர இருக்கிறது இந்த நேரத்தில் வெண்பாவின் சதியால் பாரதி வெண்பாவை திருமணம் செய்து கொள்ள முடிவெடுக்கிறார். பிறகு இந்த திருமணத்தை கண்ணம்மா நிறுத்தி விடுகிறார் இதனால் வெண்பாவின் சுயரூபம் பாரதிக்கு தெரிய வர அவரை வெறுத்து ஒதுக்குகிறார்.

இப்படிப்பட்ட நிலையில் வெண்பா மற்றும் ரோகித் இருவருக்கும் திருமணம் நடக்கிறது இருந்தாலும் வெண்பா எப்படியாவது பாரதியை அடைந்தாக வேண்டும் என முயற்சி செய்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் தன்னுடைய கருவில் உள்ள குழந்தையை கலைப்பதற்காக மாடியில் இருந்து கீழே விழுகிறார் நிலையில் பாரதியின் செயலைக் கண்டு ஹேமா தன்னை அனாதை ஆசிரமத்தில் சேர்த்து விடுமாறு கண்ணம்மாவிடம் கேட்கிறார்.

பிறகு அனைவர் முன்னிலையிலும் கதறி அழுகிறார் இதனை பார்த்தவுடன் கண்ணம்மா ஹேமாவிடம் நான்தான் உன்னுடைய அம்மா என அனைத்து உண்மைகளையும் சொல்லிவிடுகிறார். அந்த நேரத்தில் சௌந்தர்யா நடித்த தடுத்தாலும் அதனையும் மீறி கண்ணம்மா உண்மையை போட்டு உடைக்கிறார் இதனால் ஹேமா மிகுந்த மகிழ்ச்சி அடைகிறார்.

எனவே கண்ணம்மா ஹேமாவை அழைத்துக் கொண்டு சென்று விடுகிறார் இதனால் பாரதிக்கு மன உளைச்சல் ஏற்படுகிறது இப்படிப்பட்ட நிலையில்  தற்போது பாரதிக்கு டிஎன்ஏ டெஸ்ட் வருகிறது. அதன் மூலம் ஹேமா, லட்சுமி இருவரும் தன்னுடைய மகள்கள்தான் கண்ணம்மாவின் மீது அந்த தப்பும் இல்லை என்பதற்காக மன்னிப்பு கேட்பதற்காக அவரின் வீட்டிற்கு செல்கிறார்.

பிறக அனைவரும் ஒன்றிணைய இதனை பற்றி தெரிந்து கொள்ள வெண்பா உச்சகட்ட கோபத்தில் நான் பாரதியின் குடும்பத்தை பழிவாங்கிய தீருவேன் என நிற்கிறார் எனவே இதனை வைத்து பாரதி கண்ணம்மா சீசன் 2 தொடரை இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.